உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / முதல்வர் பதவிக்காக காய் நகர்த்தும் சிவகுமார்: சித்தராமையா நாற்காலியை அசைக்க முடியுமா?

முதல்வர் பதவிக்காக காய் நகர்த்தும் சிவகுமார்: சித்தராமையா நாற்காலியை அசைக்க முடியுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கடந்த ஆண்டு மே மாதம், சட்டசபை தேர்தல் நடந்தது. அதற்கு முன்பே முதல்வர்அரியணைக்கு சித்தராமையா, சிவகுமார் இடையில் போட்டா, போட்டி ஏற்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளியானதும், இருவரும் டில்லி பறந்தனர். முதல்வர் பதவி கேட்டு, மேலிடத்திற்கு தொல்லை கொடுத்தனர்.ஒருவழியாக ராகுல் ஆதரவுடன், சித்தராமையா முதல்வர் ஆனார். சோனியா ஆசியுடன் சிவகுமார் துணை முதல்வர் ஆனார். இரண்டரை ஆண்டுகள் கழித்து சிவகுமார் முதல்வர் ஆவார் என்று,அப்போது பேச்சு அடிபட்டது.இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து வரும் 20ம் தேதியுடன், ஓராண்டு முடிகிறது. இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர், முதல்வர் மாற்றம் என்ற கணக்குபடி பார்த்தால், இன்னும் ஒன்றரை ஆண்டுகள் சித்தராமையா முதல்வர் பதவியில் இருக்கலாம்.

கடைசி கட்டம்

ஆனால், சிவகுமாருக்கு இப்போதே முதல்வர் ஆசை துளிர்விட்டு உள்ளது. லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றால், முதல்வர் ஆகிவிடலாம் என்று மனக்கணக்கு போட்டு உள்ளார்.அதாவது கட்சியின் தலைவர் என்ற முறையில், தீவிர பிரசாரம் செய்து, அதிக இடங்களில் வெற்றி பெற வைத்தேன் என்று, மேலிடத்தை நம்ப வைத்து, முதல்வர் பதவி வாங்கலாம் என்பது அவரது கணக்கு. ஆனால், முதல்வரின் கணக்கு வேறு விதமாக உள்ளது.காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும் பட்சத்தில், ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டுக்குள் ஐந்து வாக்குறுதி திட்டங்களையும் நிறைவேற்றி உள்ளேன். இதனால் நானே முதல்வராக தொடர்கிறேன் என்று, மேலிடத்திடம் கேட்கவும் வாய்ப்பு உள்ளது. அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று, சித்தராமையா அறிவித்து விட்டார்.இதனால் என் அரசியல் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கிறேன். ஐந்து ஆண்டுகளும் முதல்வராக இருக்க வாய்ப்பு கொடுங்கள் என்று, மேலிடத்திடம் உருக்கமாக கேட்கவும் வாய்ப்பு இருக்கிறது.ஆனால் காங்கிரஸ் குறைந்த இடங்களில் மட்டும் வெற்றி பெற்றால், முதல்வர், அமைச்சர்கள் மாற்றம் நடக்கலாம் என்றும், தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் அதிக இடங்களில் காங்கிரசை வெற்றி பெற வைக்க, முதல்வர் சித்தராமையா, உள் ஒப்பந்த அரசியல் நடத்தவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் சொல்கின்றன.கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்றது. ஆளுங்கட்சியாக தேர்தலை சந்தித்த பா.ஜ., 65 இடங்களில் மட்டுமே வென்றது. 15 முதல் 20 தொகுதிகளில் சமரச அரசியல் நடந்ததாக, பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் கூறி வருகிறார். அதாவது சித்தராமையாவும், எடியூரப்பாவும் பேசி வைத்து, அரசியல் செய்வதாக அவர் கூறுகிறார்.

ரெட்டி போட்ட குண்டு

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, கொப்பாலில் ஒரு கூட்டத்தில் பேசுகையில், 'கடந்த சட்டசபை தேர்தலின் போது, சித்தராமையா என்னுடன் சமரச அரசியல் செய்தார். காங்கிரசை ஆட்சிக்கு கொண்டு வர, எங்கள் ஆதரவை பெற முயன்றார். இதனால் கங்காவதி, பல்லாரியில் அவர் பிரசாரம் செய்யவில்லை' என்று குண்டை துாக்கி போட்டார்.முதல்வராக நீடிப்பதற்காக சமரச அரசியல் ஆயுதத்தை, சித்தராமையா மீண்டும் கையில் எடுக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.ஒருவேளை பா.ஜ.,வுடன் சமரச அரசியல் செய்து, காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றால், முதல்வர் பதவியை விட்டு தர சித்தராமையா கண்டிப்பாக மறுப்பார். இதனால் சிவகுமார் முதல்வர் ஆசைக்கு ஆப்பு வைக்கவும் வாய்ப்பு உள்ளது. என்ன நடக்க போகிறது என்பதற்கு, காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Barakat Ali
மே 04, 2024 14:05

நமது சர்வாதிகார மன்னர் குடும்பத்தின் ஆதரவு யாருக்கு ????


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 04, 2024 05:20

இது போன்ற Syndicate அரசியல் மிகவும் ஆபத்தானது மக்களை முட்டாள்கள் ஆக்கும் அரசியல் கர்நாடகாவில் தொடர்ந்து ஒரே கட்சி தொடர்ச்சியாக இரண்டாவது முறை வென்றதில்லை என்பதற்காக இது போல் செய்யக்கூடாது இது மக்களை ஏமாற்றும் செயல் எப்படி தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஆன திமுகவும் அதிமுகவும் ஹிந்தி திணிப்பு நீட் போன்ற இக்காலத்திற்கு தேவையில்லாதவைகளை வைத்தும் இலவசங்கள் அள்ளி வீசியும் குறு நில மன்னர்களாக இருக்கும் ஜாதி கட்சிகள் இணைந்தும் மற்றும் தற்போது புதிய ஜாதிகளாக சினிமா நடிகர்கள் வைத்து புதிய கட்சிகள் துவங்க ஊக்கமளித்து பின்னர் அக்கட்சிகளை தங்களுடன் இணைத்துக் கொண்டு எப்பொழுதும் தாங்களே ஆட்சி செய்ய வேண்டும் திமுக அதிமுக இருவரில் யார் ஆட்சி செய்தாலும் அந்த அந்த எதிர் கட்சிகளுக்கு பங்குகளை சரியாக அளித்து சமரச அரசியல் செய்வது மிகவும் ஆபத்தானது இதனால் இவர்கள் எப்போதும் இவர்கள் மக்களை கையேந்தி நிற்கும் அவல நிலையில் வைத்திருப்பார்கள் ஆனால் ஒரு கட்டத்தில் நிச்சயம் பொருளாதாரம் திவாலாகி அரசும் நாடும் அன்னியர்கள் கைக்கு சென்றுவிடும் அப்போது மக்கள் நிலை திண்டாட்டம் ஆகி விடும் இதை பொது மக்கள் உணர்ந்து எப்படி தண்ணீர் நம் வருங்கால சந்ததியினருக்கு சேமித்து வைக்க வேண்டும் மரங்கள் வெட்டக்கூடாது மரங்கள் வளர்த்து நம் வருங்கால சந்ததியினர் நன்கு வாழ வழிவகை செய்ய வேண்டும் என்று நினைக்கிறோமோ அது போல் இந்த சமரச அரசியல் நடத்தும் திமுக மற்றும் அதிமுகவை விட்டு புதிய தேசிய சிந்தனை உள்ள காலத்திற்கேற்ற சிந்தனை உள்ள பழைய காலத்திற்கு உதவாத கொள்கைகள் இல்லாத புதிய ஆக்கபூர்வமான கொள்கைகள் உடைய கட்சியை அரசவைக்கு ல் மக்கள் வாக்களிக்க வேண்டும்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை