வாசகர்கள் கருத்துகள் ( 1 )
WILL VOTE FOR BJP ONLY
மரக்காணம் மேற்கு ஒன்றியம் வி.சி., கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளதாக முன்னாள் அமைச்சருக்கு ரகசிய தகவல் கிடைத்ததால், திடீரென களத்தில் குதித்து களமாடிய சம்பவம் வி.சி., கட்சியினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.விழுப்புரம் லோக்சபா (தனி) தொகுதி, திண்டிவனம் சட்டசபை (தனி) தொகுதிக்குட்பட்ட மரக்காணம் மேற்கு ஒன்றியம் பகுதி வி.சி., கட்சி தன் முழு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதாகவும், இதன் காரணமாக அ.தி.மு.க.,விற்கு பின்னடைவு ஏற்படும் என ரகசிய தகவல் முன்னாள் அமைச்சர், மாவட்ட செயலாளர் சண்முகத்திற்கு வந்தது.இதனால், தனது ரத்தத்தின் ரத்தங்களுடன் மரக்காணம் மேற்கு ஒன்றியத்தை மையமிட்டு அப்பகுதியில் உள்ள அனைத்து கிளைக் கழகச் செயலாளர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்களை சிறப்பாக கவனித்தார்.இதனை சற்றும் எதிர்பார்க்காத கிளைக் கழகச் செயலாளர்கள் திக்கு முக்காடினர். அதேசமயம் வி.சி., கட்சி நிர்வாகிகளும் பெரிதும் நம்பி இருந்த மரக்காணம் மேற்கு ஒன்றியம் அ.தி.மு.க.,வின் கோட்டையாக மாறிவிடுமோ என்ற கலக்கத்தில் உள்ளனர்-நமது நிருபர்-.
WILL VOTE FOR BJP ONLY