உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ரூ.37,907 கோடி வெள்ள நிவாரணம் கோரி : அமித் ஷாவை சந்திக்க தமிழக எம்.பி.,க்கள் முடிவு

ரூ.37,907 கோடி வெள்ள நிவாரணம் கோரி : அமித் ஷாவை சந்திக்க தமிழக எம்.பி.,க்கள் முடிவு

'தமிழகத்திற்கு, 37,907 கோடி ரூபாய் வெள்ள நிவாரணத்தை விரைந்து வழங்க வலியுறுத்தி, அனைத்து கட்சி எம்.பி.,க்கள் குழுவினர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்கப்பட்டு உள்ளது' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர், 3, 4ம் தேதிகளில் வீசிய, 'மிக்ஜாம்' புயலால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. அதேபோல, டிசம்பர் 17 மற்றும், 18ம் தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழையால், துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில், மிக கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த இரண்டு இயற்கை பேரிடர்களுக்கும் மத்திய அரசிடம், 37,907 கோடி ரூபாய் நிவாரணம் கோரப்பட்டுள்ளது. இதில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட மறுகட்டமைப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு, 19,692 கோடி ரூபாயும், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களின் மறுகட்டமைப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு, 18,214 கோடி ரூபாயும் அடக்கம்.புயல் பாதிப்புகளை, மத்திய குழுவினர் பார்வையிட்டு சென்றுள்ளனர்.ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் ஆய்வு செய்து, உரிய நிவாரண தொகையை வழங்குவதாக உறுதியளித்து உள்ளார்.மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும், துாத்துக்குடி மாவட்டத்திற்கு சென்று, வெள்ள பாதிப்பை ஆய்வு செய்தார்.மத்திய குழு ஆய்வு மற்றும் மத்திய அமைச்சர்கள் பார்வையிட்ட பிறகும், மத்திய அரசிடம் இருந்து இதுவரை நிவாரண தொகை வழங்கப்படவில்லை.இதுபோன்ற இயற்கை பேரிடர்கள் மற்ற மாநிலங்களில் ஏற்பட்ட போது, குறுகிய காலத்தில் மத்திய அரசு நிவாரண நிதியை, தேசிய பேரிடர் நிதியில் இருந்து வழங்கியுள்ளது.பேரிடர் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் வெள்ள நிவாரண பணிகளுக்கு, தமிழக அரசு இதுவரை, 2,100 கோடி ரூபாயை செலவு செய்துள்ளது. குறு, சிறு தொழில் நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்டோருக்கு உதவும் வகையில், 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான வாழ்வாதார மறுகட்டமைப்பு திட்டத்தையும், தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழக அரசு கோரியுள்ள 37,907 கோடி ரூபாயை உடனடியாக வழங்க வலியுறுத்தி, தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சி எம்.பி.,க்களும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

rajen.tnl
ஜன 05, 2024 22:58

தமிழக மக்கள் மீது இரக்கம் இருந்தால் நிதியை இவனுங்க கையில் கொடுக்காதீங்க


Siva
ஜன 05, 2024 22:51

மோடி அரசே கொடுக்கனுன்னு முடிவு எடுத்தால் ஒவ்வொரு மக்கள் AC யில் நீங்களே போட்டு விடுங்கள் .. இந்த பாவிகளை நம்பாதீர்கள்


K.n. Dhasarathan
ஜன 05, 2024 21:36

மும்பை சுப்பன் அவர்களே அப்போ உள்துறை அமைச்சரை பார்ப்பதை விட அதாணியையோ அல்லது அம்பானியையோ பார்க்கலாம் என்று சொல்கிறீர்கள்,


rajen.tnl
ஜன 05, 2024 22:58

கண்ணாடியை மேலே தூக்கிட்டு பாருங்க .. தெளிவா தெரியும்


Veeraraghavan Jagannathan
ஜன 05, 2024 20:47

நேரடியாக மத்திய அரசே பாதிக்கப்பட்டவர்களின் கணக்கில் வரவு வைக்க வேண்டும்.


A1Suresh
ஜன 05, 2024 18:01

எலெக்ஷனுக்காக ஓட்டிற்கு காசு தரத்தான் இந்த ஐடியா . கேட்டால் நிவாரண நிதி என்று முடித்துவிடுவார்கள் . எனவே தரக்கூடாது .


பரிமேலழகன் திருத்துறைப்பூண்டி
ஜன 05, 2024 16:30

திமுக உப்பிஸ் அவங்க செலவுக்கு பணம் கேட்கராங்க ~ மத்திய அரசு பணம் கொடுக்காதீங்க


சிவராஜன் மேலூர்
ஜன 05, 2024 16:23

திமுக உப்பிஸ் க்கு எவ்வளவு கொடுத்தாலும் காணாது ~ மத்திய அரசு கொடுக்கும் பணத்தில் 80 சதவீதம் திமுக உப்பிஸ் பாக்கெட் க்கு தான் போகும் ~ ஜாக்கிரதை


Kanakala Subbudu
ஜன 05, 2024 15:45

நிதி அமைச்சரை சந்திக்காமல்.உள்துறை அமைச்சரை எதற்கு பார்க்கவேண்டும். அவர் கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைந்து விடுவார் என்று பயமோ


sahayadhas
ஜன 05, 2024 13:09

தமிழ்நாட்டிற்கு வாய்பு இல்லை ராஜா


rasaa
ஜன 05, 2024 12:51

30000 எங்களுக்கு, மீதி முட்டாள்களுக்கு


மேலும் செய்திகள்