மேலும் செய்திகள்
போலி வாக்காளர்களை நீக்கினால் ஆட்சிக்கு வரலாம்
10 hour(s) ago | 2
படையெடுத்த தி.மு.க.,வினர் அடக்கி வாசித்த அ.தி.மு.க.,வினர்
10 hour(s) ago | 3
சென்னை: உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு ஒரு ஆசை. தமிழகத்தில் உள்ள பிரபல அம்மன் கோவில்கள் அனைத்திற்கும் சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்பது தான், அந்த ஆசை. இதற்காக இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு மேல் தமிழகம் வந்து யாத்திரையை மேற்கொள்ளவிருக்கிறார்.காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள துர்க்கை அம்மன் கோவில்கள் என பல கோவில்களுக்கு செல்ல முடிவெடுத்துள்ளாராம். 'என் மண் என் மக்கள்' என அண்ணாமலை நடை பயணம் மேற்கொண்டது போல, இது கோவில் பயணம் என்கின்றனர், பா.ஜ.,வினர்.வரும் 2026ல் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்ட சபை தேர்தலுக்கு அமித் ஷாவின் யாத்திரை ஒரு முன்னோட்டம் என சொல்லப்படுகிறது.'தமிழகத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் ஹிந்து அறநிலையத்துறையே இருக்காது. அதை ஒழித்துவிடுவோம்' என, தன் யாத்திரையின் போது அமித் ஷா சொல்லப்போகிறாராம்.
10 hour(s) ago | 2
10 hour(s) ago | 3