வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கேமரா வச்சால் வசூல் பாதிக்குது உங்களுக்கு என்ன
மேலும் செய்திகள்
பணி நிரந்தரம் கோரி மூன்றாவது நாளாக தொடர்ந்த செவிலியர்கள் போராட்டம்
2 hour(s) ago | 1
ஜி.கே.மணி தொகுதியில் களமிறங்கும் அன்புமணி?
5 hour(s) ago
மதுரை: தமிழக சிறைகளில் கைதிகள் அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாததால் கோஷ்டி மோதலில் ஈடுபடுவதும், தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கிறது. அவர்களை கண்காணிக்க முடியாமல் சிறைத்துறை தவித்து வருகிறது.தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், அதன்கீழ் மாவட்ட சிறைகள், கிளைச்சிறைகள் உள்ளன. ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து சிறைகளிலும் பாதுகாப்பு கருதி மெயின் கேட், உறவினர்களை சந்திக்கும் இடம், சிறை வளாகம் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதை சிறை டி.ஜி.பி., முதல் எஸ்.பி., வரை அலைபேசியில் கூட பார்க்க முடியும். அதேசமயம் கைதிகள் அறைகளில் ஒரு கேமரா கூட இல்லை. இதனால் கைதிகளை கண்காணிக்க முடியாமல் கோஷ்டி மோதல் அல்லது ஒருவருக்கு ஒருவர் தாக்கிக்கொள்ளுதல், அடிதடி போன்றவை அடிக்கடி ஏற்படுகிறது. இதை தடுக்க தவறியதாக சிறை காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.மனஅழுத்தத்தில் உள்ள கைதிகள் சிலர் தற்கொலையும் செய்து கொள்கின்றனர். சமீபத்தில்கூட புதுக்கோட்டை சிறையில் இரட்டை கொலை வழக்கில் கைதான கைதி துாக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். மற்றொரு கைதி தற்கொலைக்கு முயற்சித்தார். திருநெல்வேலி, திருச்சி, மதுரை, கோவை, புழல் உள்ளிட்ட மத்திய சிறைகளிலும் கைதிகள் தற்கொலை நடந்தது. கைதிகளின் அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதால் சிறை நிர்வாகத்திற்குதான் நல்லது என்றாலும் அதிகாரிகள் அதை செயல்படுத்தாதது மர்மமாக உள்ளது.'டேட்டா' இல்லை
சிறை காவலர்கள் கூறுகையில், ''கைதிகள் என்ன செய்கிறார்கள் என கேமரா மூலம் கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும். ஆனால் சிறை நிர்வாகம் எங்களை கண்காணிக்கும் நோக்கில்தான் கேமராக்களை பொருத்தியுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேமராக்களில் பதிவான விபரங்களை சமூக ஆர்வலர்கள் கேட்டால் 'ஒரு மாதத்திற்கான 'டேட்டா'தான் உள்ளது. நீங்கள் கேட்கும் விபரம் அழிந்து போய்விட்டது' என சிறை நிர்வாகம் சமாளித்து வருகிறது. உண்மையில் 3 மாதம் வரை 'டேட்டா' வசதி உடைய கேமராக்கள்தான் சிறைகளில் பொருத்தப்பட்டுள்ளன.துாத்துக்குடியில் மட்டும் உண்டு
கைதிகள் அறைகளில் கேமரா பொருத்தினால் தங்களது 'பிரைவசி' பாதிக்கும் என வடமாநிலத்தில் கைதி ஒருவர் வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில் செயல்படுத்த சிறைத்துறை தயங்குகிறது. அதேசமயம் கேரளாவில் அனைத்து சிறைகளிலும் கைதிகளின் அறைகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அடிக்கடி மோதல் ஏற்படும் சூழல் உள்ள துாத்துக்குடி மாவட்டம் பேரூர்ணி சிறையில் மட்டும் கைதிகளின் அறைகளில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மற்ற சிறைகளிலும் பொருத்தலாம். இதுகுறித்து டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் பரிசீலிக்க வேண்டும் என்றார்.
கேமரா வச்சால் வசூல் பாதிக்குது உங்களுக்கு என்ன
2 hour(s) ago | 1
5 hour(s) ago