உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க., எம்.எல்.ஏ., அதிருப்தி; பா.ஜ., பக்கம் இழுக்க துாது

தி.மு.க., எம்.எல்.ஏ., அதிருப்தி; பா.ஜ., பக்கம் இழுக்க துாது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி : லால்குடி தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., சவுந்தரபாண்டியன், அமைச்சர் நேரு மற்றும் கட்சியினரால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால், கட்சி தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளார். இதையடுத்து, அவரை பா.ஜ.,வில் இணைக்க சிலர் முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.தி.மு.க.,வைச் சேர்ந்த சவுந்தரபாண்டியன், தொடர்ந்து நான்காவது முறையாக எம்.எல்.ஏ.,வாக உள்ளார். திருச்சியைச் சேர்ந்த அமைச்சர் நேருவின் தீவிர ஆதரவாளராக இருந்த இவருக்கும் அமைச்சர் நேருவுக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vsg221s6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனால் அமைச்சர் நேரு, எம்.எல்.ஏ., சவுந்தரபாண்டியனை அரசு நிகழ்ச்சிகளில் புறக்கணிக்க, அதிகாரிகளும், கட்சி நிர்வாகிகளும் அவரை ஒதுக்கினர். கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளுக்கு சவுந்தரபாண்டியன் அழைக்கப்படுவதில்லை.கோபமான சவுந்தரபாண்டியன், சமீபத்தில் தான் இறந்து விட்டதாகவும், லால்குடி சட்டசபைத் தொகுதி காலியாக இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் தகவல் பதிவிட்டார். தொடர்ந்து பல்வேறு வகைகளில் தன் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்.இந்நிலையில், தமிழகம் முழுதும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இன்று காலை உணவுத் திட்டம் துவக்கப்படுகிறது. அதற்கான விழா லால்குடியிலும் நடக்கிறது. அதில் அமைச்சர் நேருவின் மகனும் பெரம்பலுார் எம்.பி.,யுமான அருண் அழைக்கப்பட்டிருக்கிறார்; சவுந்தரபாண்டியனுக்கு அழைப்பில்லை.இப்படி தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால், தலைமை மீது கடும் அதிருப்தி அடைந்திருக்கும் சவுந்தரபாண்டியன், பதவியை ராஜினாமா செய்து விட்டு, மாற்று முகாமுக்குப் போய்விடலாமா என்ற யோசனையில் இருப்பதாக தகவல் பரவி உள்ளது.இந்தத் தகவலை அடுத்து, தங்கள் கட்சிக்கு வாருங்கள் என, பா.ஜ., தரப்பில் சவுந்திரபாண்டியனுக்கு துாது அனுப்பப்பட்டு உள்ளதாக திருச்சி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Hasan Hasan
ஜூலை 16, 2024 18:34

இது அனைத்து மாவட்டங்களிலும் நடக்கிறது. சமீபத்தில் கடலூர் மாவட்ட மக்கள் முதல்வர் நிகழ்ச்சியில் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வம் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சிதம்பரம் தொகுதி ஆதிமுக சட்டமன்ற உறுப்பினர் இருப்பதால் கடலூர் திமுக சட்ட மன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன் அழைக்க பட்டார். ஒரு கட்சி காரன் கூட அவரிடம் பேசவில்லை. கலெக்டர் கூட அவரின் பெயரை உச்சரிக்கவில்லை. இப்படியே இருந்தால் வரும் காலங்களில் திமுக காணாமல் போய்விடும்


Richard Job Vasudevan
ஜூலை 16, 2024 15:20

திமுககாரன் அதிமுககூட கூட போயிடுவான்,


R.Varadarajan
ஜூலை 15, 2024 23:56

ஸ்லீப்பர் செல் என்றால் என்ன?


g. Tharanipathi
ஜூலை 15, 2024 15:29

வானதி சீனிவாசன் மற்றும் காந்தி பிஜேபியில் இருந்து விலகுவதாக ஒரு தகவல்


raja shankarraja16@yahoo.com
ஜூலை 15, 2024 12:32

அன்பில் மகேஷ் அவர்களிடம் நீங்கள் சென்றாலே போறும் நேரு தானாகவே உங்களுடன் வந்து விடுவார்


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 15, 2024 11:10

சுயமரியாதைக்கும் கௌரவத்துக்கும் விடுமுறை


varadarajan soundararajan
ஜூலை 15, 2024 10:47

சுயமரியாதை இயக்கத்தில், சட்டமன்ற உறுப்பினர் அவமானப்படுத்தப்படுவது கண்டனத்திற்குரியது


varadarajan soundararajan
ஜூலை 15, 2024 10:45

சுயமரியாதை முக்கியம்


Mahendran Puru
ஜூலை 15, 2024 10:29

சிறப்பு செய்திகளை எதிர் பார்த்தால் சிரிப்புச் செய்தியை வெளியிடுகிறது. தமிழ்நாட்டில் எந்தக் ... பாஜகவில் இணைவான், அதுவும் இருக்கும் பதவியை துறந்து.


SP
ஜூலை 15, 2024 09:48

இ்ப்படிதான் முன்பு நடிகர் நெப்போலியனை பெரம்பலூர் MPயாகவும் மத்திய இணையமைச்சராகவும் இருந்தபோதே அமைச்சர்நேருவை அனுசரிக்கவில்லையென்று ஓரம்கட்டினார்கள்.போதாதற்கு அவரது மகன் இப்பொழுது MP.காலம் மாறும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை