உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கும் மசோதா; பார்லி., கூட்டுக்குழுவுக்கு உறுப்பினர் தர தி.மு.க., மறுப்பு

பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கும் மசோதா; பார்லி., கூட்டுக்குழுவுக்கு உறுப்பினர் தர தி.மு.க., மறுப்பு

நமது டில்லி நிருபர்

பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு, 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்க நேரிட்டால், அவர்களை பதவிநீக்கம் செய்ய வழிவகுக்கும் மசோதா குறித்து, ஆய்வு செய்யும் பார்லிமென்ட் நிலைக்குழுவில் இடம்பெறுவதற்கு கட்சியின் சார்பில் உறுப்பினர் பெயரை தரும்படி பலமுறை கேட்டும் தி.மு.க., தர முன்வரவில்லை என்பது தெரியவந்துள்ளது.பிரதமர், முதல்வர்கள் மற்றும் மத்திய - மாநில அமைச்சர்கள் தீவிரமான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டாலோ அல்லது 30 நாட்கள் சிறைக்காவலில் வைக்கப்பட்டாலோ அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கான மசோதா, கடந்த பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டடது. அரசுகளுக்கு தலைமை பொறுப்பு வகிப்பவர்கள் சிறைக்குள் இருந்து கொண்டே அரசு நிர்வாகத்தை நடத்தாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவே, இந்த மசோதாக்கள் கொண்டு வரப்படுவதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.

ரகளை

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அப்போதே கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சபையில் நிகழ்ந்த கடும் ரகளையை அடுத்து, இந்த முக்கிய மசோதா குறித்து விரிவாக ஆய்வு, செய்வதற்காக பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.அதன் அடிப்படையில், இந்த குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள் யார் என்பதை இறுதி செய்யும் பணி துவங்கி நடைபெற்று வந்தது. ஒவ்வொரு முக்கிய கட்சியிடமும், பெயரைத் தாருங்கள் என லோக்சபா செயலக அதிகாரிகள் கேட்டனர்.பெயர்களை விரைந்து அளிக்கும்படியும், உரிய ஒத்துழைப்பை வழங்கும்படியும் கேட்டு, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சரான கிரண் ரிஜுஜு அலுவலகத்திலிருந்தும் தகவல்கள் அனுப்பப்பட்டன. இவ்வாறு பலமுறை கேட்டும், காங்கிரஸ், தி.மு.க., திரிணமுல் காங்., ஆகிய கட்சிகள், எம்.பி.,க்களின் பெயர்களைத் தருவதற்கு முன்வரவில்லை.இதனால், பெரும் காலதாமதம் ஏற்பட்டது. அடுத்த கூட்டத்தொடருக்கான அறிவிப்பும் வெளியாகி விட்டது. இதனால், கூட்டுக்குழு அமைப்பதில் இழுபறி ஏற்படும் நிலை உருவாகத் துவங்கியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது.அதன்படி, பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. புவனேஸ்வரைச் சேர்ந்த பா.ஜ., - எம்.பி. அபராஜிதா சாரங்கி, இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தவி ர, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., சி.வி.சண்முகம் உள்ளிட்ட, 31 உறுப்பினர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர்.

புறக்கணிப்பு

இந்த கூட்டம் விரைவில் கூடி மசோதா குறித்து ஆய்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பார்லிமென்ட் வரலாற்றில் முக்கிய எதிர்க்கட்சிகள் இடம் பெறாமல், கூட்டுக்குழு அமைக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து லோக்சபா செயலக அதிகாரிகள் கூறியதாவது: அரசு தரப்பில் எதிர்க்கட்சிகளை அணுவதற்கு பலமுறை முயற்சி எடுக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும், உருப்படியான பதில் வரவில்லை. காங் கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த எம்.பி.,க்கள் ராகுல், ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரிடம் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசியும் பலனில்லை.தி.மு.க., மூத்த எம்.பி.,க்கள் பாலு, சிவா, கனிமொழி ஆகிய தரப்புகளும், இவ்விஷயத்தில் பதில் தரவில்லை. திரிணமுல் காங்., மூத்த எம்.பி., அபிஷேக் பானர்ஜியிடம் கேட்டதற்கு இந்த குழுவை புறக்கணிப்பதாக கூறிவிட்டார். அதேசமயம், எதிர்க்கட்சிகள் தரப்பில் தேசியவாத காங்கிரஸ் எம்.பி., சுப்ரியா சுலே, ஏ.ஐ.எம்.ஐ.எம்., -எம்.பி., ஒவைசி, அகாலி தள எம்.பி., ஹர்சிம்ரத் கவுர்பாதல் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

சாமானியன்
நவ 15, 2025 22:24

அரசியல் காரணங்களுக்காக நீதிமன்றங்களை அனுகினால், வக்கில் ஃபீஸ்ஐ கட்சிதான் செலவு செய்ய வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் கை வைக்கக் கூடாது.


Kalyanasundaram Linga Moorthi
நவ 16, 2025 02:30

may be in your dreams. these parties will not / never name the people for this meeting - 100% are corrupt


Matt P
நவ 15, 2025 22:12

மடியில் கனமிருப்பவர்களுக்கு வழியில் பயமிருக்க தான் செய்யும். திருட்டு பசங்க திரு திருவென முழிக்கானுக. எப்படி சமாளிப்பதென்று.


Matt P
நவ 15, 2025 22:08

தவறு செய்பவர்களுக்கு தான் தண்டனை-பதவி நீக்கம் என்று தெளிவாக இருந்தாலும் இந்த அளவுக்கு தவறுக்கு துணை போகும் கட்சியோ அரசியல்வாதிகளோ தமிழகம் தவிர்த்து உலகின் வேறு எந்த மூலையிலும் தேடி பார்த்தாலும் தென்படுவார்களா என்றால் புதிர் தான். இந்த சட்டம் பிரதமருக்கும் தானேபொருந்தபோகிறது. செந்திலுக்கும் பொன்முடிக்கும் பதவி கொடுக்க நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கும்போது பிற்காலங்களில் இதே நிலை திமுகவுக்கு வரும் என்பது தான் காரணம். ஸ்தாலின் இல்லைன்னா உதய ...முதல்வர் பதவிக்கு. முதல்வர் பதவி வேறு எங்கும் போகாது எப்படியும்.


சிந்தனை
நவ 15, 2025 21:55

அந்த சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்தால் திமுக அவர்கள் ஒத்துக் கொள்வார்கள்... திருடுவதை குலத்தொழிலாக கொண்டிருப்பவர்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது... என்று திருத்தம் தேவை


என்றும் இந்தியன்
நவ 15, 2025 15:49

இது திமுக மாதிரி கட்சிகளுக்கு மிக மிக மிக மோசமான பயமுறுத்தும் மசோதா.


D Natarajan
நவ 15, 2025 08:10

dmk வினர்க்கு தெரியும் எப்படி ஊழல் செய்து தப்பிப்பது என்று. மத்திய அரசு கொண்டு வந்த சட்டம் நிறைவேற வேண்டும். இதன் மூலம் சிறையில் இருந்து கொண்டு அதிகாரம் செய்வது தடுக்கப்படும். மிக அவசியமான சட்டம்


D Natarajan
நவ 15, 2025 08:10

dmk வினர்க்கு தெரியும் எப்படி ஊழல் செய்து தப்பிப்பது என்று. மத்திய அரசு கொண்டு வந்த சட்டம் நிறைவேற வேண்டும். இதன் மூலம் சிறையில் இருந்து கொண்டு அதிகாரம் செய்வது தடுக்கப்படும். மிக அவசியமான சட்டம்


Venugopal, S
நவ 15, 2025 07:48

அவ்ளோ பயம்...ஊரை கொள்ளை அடிச்சு சேர்த்து வைத்துள்ளது அவ்ளோ...மடியில் கனம் இல்லை என்றால் வழியில் பயம் ஏன்


KOVAIKARAN
நவ 15, 2025 07:27

 பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கும் மசோதா பாராளுமன்றத்தில் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி அவர்களின் ஒப்புதல் பெற்று கேஜெட்டில் பதிவுசெய்துவிட்டால், இந்த சட்டம் அமலுக்கு வந்து விடும். அதன்பிறகு முதலில் பலியாகப்போவது திமுக அமைச்சர்களும், MP, MLA க்களும் தான். அதற்காகவே இதை திமுக விரும்பவில்லை. எப்படியும் இந்த சட்டம் விரைவில் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்துவிடும். அபோது நாம் வேடிக்கை பார்க்கலாம்.


Indhuindian
நவ 15, 2025 07:05

அய்யய்யோ பூனை கண்ணை மூடிக்கிச்சு பூலோகமெல்லாம் இருண்டு போச்சுதே


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை