உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  ஜனவரிக்குள் மெகா கூட்டணி அமையும்; மா.செ.,க்களிடம் பழனிசாமி உத்தரவாதம்

 ஜனவரிக்குள் மெகா கூட்டணி அமையும்; மா.செ.,க்களிடம் பழனிசாமி உத்தரவாதம்

சென்னை : 'வரும் ஜனவரிக்குள் மெகா கூட்டணி இறுதி செய்யப்படும்' என, அ.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார். எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் திருத்தப் பணிகள், கடந்த 4ம் தேதி முதல் நடந்து வருகின்றன. இது தொடர்பாக நேற்று காலை, மாவட்டச் செயலர்களுடன், 'வீடியோ கான்பிரன்ஸ்' வாயிலாக, பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் கூறியுள்ளதாவது:

அ.தி.மு.க., மாவட்டச் செயலர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள், ஐ.டி., அணி நிர்வாகிகள், துரிதமாக எஸ்.ஐ.ஆர்., பணியை மேற்கொள்ள வேண்டும். அவரவர் மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில், அனைத்து பகுதிகளிலும் வாக்காளர் படிவம் கொடுக்கப்பட்டு விட்டதா என்று, ஆய்வு செய்ய வேண்டும். யாருக்காவது படிவம் கொடுக்கப்படாமல் இருந்தால், அ.தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர் வாயிலாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்காளர்களிடம் கொடுக்கப்பட்ட படிவத்தை முறையாக திருப்பி பெற்று, ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். துரிதமாக இந்த பணியை மேற்கொள்ள வேண்டும். தி.மு.க.,வினர் தில்லுமுல்லு செய்வதை தடுத்து நிறுத்தி, அனைத்து வாக்காளர்களும் பட்டியலில் இடம்பெறுவதை உறுதிப்படுத்துங்கள். வரும் 2026 சட்டசபை தேர்தல் பணியை, உடனடியாக துவங்க வேண்டும். தங்கள் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கு தகுதியான, சரியான வேட்பாளர் பெயர்களை பரிந்துரை செய்யுங்கள். கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து செயல்படுங்கள். உள்ளூரில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை முன்வைத்து, போராட்டங்கள் நடத்த வேண்டும். அ.தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கு செய்த சாதனைப் பட்டியலை, ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். வரும் ஜனவரிக்குள் மெகா கூட்டணி இறுதி செய்யப்பட்டு விடும். தலைமையின் தேர்தல் வியூகத்தை முழுமையாக செயல்படுத்துவதற்குத் தயாராக இருங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், த.வெ.க.,வில் இணைய இருப்பதாகவும், சில அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் அமைச்சர்கள், த.வெ.க., மற்றும் தி.மு.க.,வில் இணைய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், 'வலுவான மெகா கூட்டணி அமைக்கப்படும். எனவே, சட்டசபை தேர்தல் பணிகளை துவங்குங்கள். தகுதியான, வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர் பெயர்களை பரிந்துரை செய்யுங்கள்' என, நம்பிக்கை அளிக்கும் வகையில், பழனிசாமி பேசியிருப்பதாக, அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர். இழப்பை சந்திக்க வேண்டும் மா.செ.,க்கள் மீது அதிருப்தி மாவட்டச் செயலர்களுடன் பேசிய பழனிசாமி, 'எஸ்.ஐ.,ஆரை கடுமையாக எதிர்க்கும் தி.மு.க., அப்பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. எஸ்.ஐ.ஆர்., படிவங்களை வீடு வீடாகச் சென்று கொடுப்பது, அதை பூர்த்தி செய்ய உதவி செய்வது, படிவங்களை திரும்பப் பெறுவது என, தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் மட்டுமல்லாது, அக்கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், எஸ்.ஐ.ஆர்., பணிகளில் அ.தி.மு.க., நிர்வாகிகள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. எஸ்.ஐ.ஆர்., பணிகளில் கோட்டை விட்டால், வரும் சட்டசபை தேர்தலில் இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும்' என அதிருப்தி தெரிவித்துள்ளார். ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

நாடோடி
நவ 26, 2025 08:24

இப்படியே சொல்லி சொல்லி 10 தோல்வி பழனிச்சாமின்னு பேரு வாங்கியாச்சு அடுத்து 11 தோல்வி பழனிச்சாமின்னு பேர் வாங்காம ஆகுற வேலையை பாருங்க


அப்பாவி
நவ 26, 2025 07:35

கைல கால்ல விழுந்து...


vivek
நவ 26, 2025 08:50

உனக்கு டாஸ்மாக் டோக்கன் வந்தா போதும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை