மத்திய அரசின் அம்ரித் பாரத் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
மத்திய அரசின் 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், தமிழகத்தில் பெரம்பூர், திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம், சேலம், கரூர், திருப்பூர், போத்தனுார், தென்காசி, விருதுநகர், தஞ்சாவூர், விழுப்புரம், நாகர்கோவில் உட்பட 18 ரயில்வேஸ்டேஷன்கள் மேம்படுத்தப்படுகின்றன.இதற்கான பணிகளை, 2023 ஆகஸ்ட் மாதம், காணொளி வாயிலாக பிரதமர் மோடி துவக்கி வைத்தார். முதல்கட்ட பணிகளுக்கு, 381 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.ஸ்டேஷன்களின் லிப்ட், பிளாட்பார்ம், பயணியர் காத்திருப்பு அறை, நுழைவாயில் சீரமைப்பு, எஸ்கலேட்டர்கள், மல்டி லெவல் பார்க்கிங், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பணிகள் ஐந்து மாதமாக நடந்து வந்தன.கடந்த 150 நாட்களில் என்னென்ன பணிகள் நடந்துள்ளன; இன்னமும் எவ்வளவு பணிகள் மீதமுள்ளன; பணிகள் முழுமை பெற இன்னமும் எவ்வளவு நாட்களாகும் ஆகிய விபரங்கள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'விரைவில் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கு முன், குறிப்பிட்ட பகுதிக்கு திறப்பு விழா நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது' என்றனர்.-- நமது நிருபர் -