உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கார்த்தி எம்.பி.,யை கட்சியை விட்டு நீக்க போராட்ட முடிவு

கார்த்தி எம்.பி.,யை கட்சியை விட்டு நீக்க போராட்ட முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தேவகோட்டை: சிவகங்கை எம்.பி., கார்த்தியை காங்கிரசை விட்டு நீக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக கட்சியின் ஒரு பிரிவினர் அறிவித்துள்ளனர்.சிவகங்கை மாவட்டத்தில் காங்.,கட்சியினர் இரு கோஷ்டிகளாக செயல்படுகின்றனர். மாவட்ட தலைவராக சத்தியமூர்த்தி இருந்தார். சில நாட்களுக்கு முன்பு சஞ்சய்காந்தி மாவட்ட காங்., தலைவராக அறிவிக்கப்பட்டார். எனினும் இவரது தலைமையை ஏற்காததால் கட்சியினர் இரு பிரிவாக செயல்படுகின்றனர்.இந்நிலையில் தேவகோட்டையில் நகர் காங்.,சார்பில் நகர் தலைவர் லோகநாதன் தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் என்றாலும் எம்.பி.,கார்த்திக்கிற்கு எதிரான ஆர்ப்பாட்டமாக மாறியது. மாவட்ட முன்னாள் தலைவர் சத்தியமூர்த்தி, பொருளாளர் பழனியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம், முன்னாள் நகராட்சி தலைவர் வேலுச்சாமி, அகில இந்திய கமிட்டி உறுப்பினர் மீராஉசேன், மாவட்ட நிர்வாகிகள் காளையார்கோவில் ஆரோக்கியசாமி, கல்லல் உடையப்பன், இருதயராஜ், மானாமதுரை கணேசன், அகரம் ஆறுமுகம், நஜ்முதீன் உள்ளிட்டோர் பேசினர்.நிர்வாகிகள் பேசியதாவது: கார்த்தி டிவிக்கு பேட்டியளித்த போது பிரதமர் மோடிக்கு எதிராக தகுதியானவர் யாருமில்லை என்றார். நெறியாளர் முன்னாள் தலைவர் ராகுல், தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை குறிப்பிட்டு கேட்டபோது மீண்டும் மோடிக்கு எதிராக தகுதியானவர் யாருமில்லை என்று கூறினார். அவரது பேட்டியை கண்டித்தும், காங்., தலைமைக்கு தகுதியில்லை எனக்கூறிய அவரை கட்சியை விட்டு நீக்க வேண்டும். மாவட்டத்தில் ஒற்றுமையாக இருந்த கட்சியில் கோஷ்டியை உருவாக்கியதை கண்டிக்கத்தக்கது என பேசினர்.

உண்ணாவிரதம்

பொருளாளர் பழனியப்பன் கூறியதாவது: காங்., முன்னாள் தலைவர் ராகுல் பிரதமராக ஒவ்வொரு தொண்டர்களும் வேலை செய்கின்றனர். பா.ஜ., கட்சியை சேர்ந்தவரை போல் பிரதமர் மோடிக்கு நிகர் யாருமில்லை என எம்.பி., கார்த்தி கூறியுள்ளார். அவரை கட்சியை விட்டு நீக்காவிட்டால் மாவட்ட முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Venkatesan.v
ஜன 05, 2024 04:01

Kaarthiya கள்ளிப்பாள் குடுத்து கொன்னு இருக்கணும்... சிதம்பரம் & நளினி செய்த தவறு ????


M Ramachandran
ஜன 04, 2024 23:53

கார்த்திக் சிதம்பரம் கொஞ்சம் எதார்த்த மக்க சிந்திக்க koodiyavar. மற்றதெல்லாம் சும்மா ஜால்றா போட தான் லாயக்கு


M Ramachandran
ஜன 04, 2024 23:52

எழுந்து நிற்கவெ துப்பில்லை இதில் போர் ராட்டமா கேலிக்கூத்து. அது தான் சாந்தி சிருச்சுதென தஞ்சையில் ரயில் முன் போரட்டம் 5. பேர் ரயில் முன் நின்று கூவினார்களெ அதுவும் தலைமை தங்கின ஆளும்கிரியுடன் சேர்த்து .


தாமரை மலர்கிறது
ஜன 04, 2024 20:45

கார்த்திக் சிதம்பரம் முதல்முறையாக உண்மையை கூறியுள்ளார்.


Parthasarathy Badrinarayanan
ஜன 04, 2024 20:26

இத்தாலி அடிமைகளுக்கு உண்மையைச் சொன்னால் எரிகிறது


r.sundaram
ஜன 04, 2024 14:25

உண்மையை சொன்னால் சிலருக்கு கோபம் வருவது இயற்கைதான். ஜால்றா அடித்தே பழக்க மாணவர்களுக்கு வித்தியாசமான ஒரு கருத்தை கேட்க்கும்போது எரிச்சல் வருவது சகஜம் தான்.


செந்தமிழ் கார்த்திக்
ஜன 04, 2024 14:20

தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர் பதவி கொடுக்க பட வில்லை. கட்சியில் ஒதுக்க படுகிறார். தானாக கட்சியில் இருந்து வெளியேற்றினால் அல்லது வெளியேறினால் மரியாதை கிடைக்காது . ஆகையால், தன்மீது சுமத்தப்பட்ட வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், ஊழல் BJp-Party - யில் சேரவும், கார்த்திக் சிதம்பரம் இப்படி தான் பேசியாக வேண்டும்.


Suppan
ஜன 04, 2024 14:05

வாக்கு இயந்திரம்hack செய்யமுடியாதது , மோதிக்கு சமமானவர் காங்கிரசில் இல்லை ஆகிய இரண்டு கருத்துக்களும் சரிதான், அவருடைய அப்பச்சி கூட மோதிக்கு சமமானவர் இல்லை என்று ஒப்புக்கொண்டிருக்கிறார்.


ganesha
ஜன 04, 2024 13:58

இது கட்சிக்கு அப்பாற்பட்டு மனசாட்சி யோட சொன்ன பதில் யோவ் இந்த ஆளு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஆவதற்கு ஆசை படறார்


அசோகன்
ஜன 04, 2024 11:57

தொண்டர்களே இல்லாத ஒரு கட்சியில் ஆயிரகணக்கில் தலைவர்கள்.......... ????????????????


மேலும் செய்திகள்









புதிய வீடியோ