உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வங்கக்கடலில் வினோத மாற்றங்கள்: கணிக்க முடியாமல் விஞ்ஞானிகள் தவிப்பு!

வங்கக்கடலில் வினோத மாற்றங்கள்: கணிக்க முடியாமல் விஞ்ஞானிகள் தவிப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: காலநிலை மாற்றத்தால், காற்றின் திசை மாறுபட்டு, தென்மேற்கு பருவமழைக் காலத்திலும், வங்கக்கடலில் அடிக்கடி சூறாவளிக் காற்று வீசுவதாக, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.தென்மேற்கு பருவமழை ஜூனில் துவங்கி தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த சில வாரங்களாக, தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில், அவ்வப்போது மிதமான மழை பெய்கிறது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், 'இன்னும் மூன்று நாட்களுக்கு, தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும்.

அடிக்கடி சூறாவளி

'இந்த நாட்களில், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் பெரும்பாலான இடங்களில், சூறாவளிக் காற்று வீசுவதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுஉள்ளது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.தென்மேற்கு பருவமழைக் காலத்தில், இயல்பாக அரபிக்கடல் பகுதியில்தான், சூறாவளிக் காற்று அதிகமாக வீசும். வங்கக்கடலில் அவ்வளவாக இருக்காது. இந்த முறை, வங்கக் கடலிலும் அடிக்கடி சூறாவளிக் காற்று வீசுகிறது.கடலியல் மற்றும் வானிலை குறித்த ஆராய்ச்சியாளரும், அண்ணா பல்கலையின் காலநிலை மாற்றம் மற்றும் பேரழிவு மேலாண்மை துறையின் பேராசிரியருமான ஆ.ராமச்சந்திரன் கூறியதாவது:தென்மேற்கு பருவமழைக் காலத்தில், வங்கக்கடலில் சூறாவளிக் காற்று தொடரக்கூடாது. ஆனால், இந்த ஆண்டு வானிலை ஆய்வாளர்கள் மற்றும் வானிலை துறை அதிகாரிகளை குழப்பும் வகையில், காற்றின் திசை அடிக்கடி மாறுகிறது. அதனால், வங்கக்கடலில் அடிக்கடி சூறாவளிக் காற்று வீசுகிறது. இது, காலநிலை மாற்றத்தின் விளைவாகும்.

நீளும் ஆராய்ச்சிகள்

இந்தியா, இலங்கை, ஆப்ரிக்கா போன்ற நாடுகள், பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ளன. பூமியின் கடல் பகுதியானது, பூமத்திய ரேகைக்கு கீழேதான் உள்ளது. வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு கலப்பு அதிகமாகி விட்டது. அதனால், பூமியில் வெப்ப அளவும், அதன் மேல் இயல்பான வானிலையும் மாறியுள்ளது.இதன் காரணமாக, காற்றின் வீச்சு அடிக்கடி மாறி, பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில், இயல்பு நிலைக்கு மாறாக சூறாவளி வீசுகிறது. எதிர்காலத்தில் வங்கக் கடலை நம்பி, எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாத அளவுக்கு, அதன் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.இதை பல்வேறு தரப்பினரும் ஆய்வு செய்கின்றனர். ஆனால், 'இதுதான் பிரச்னை; இதுதான் தீர்வு' என முடிவு செய்யாமல், ஆராய்ச்சிகள் நீள்கின்றன. எனவே, காலநிலை மாற்றத்துக்கான வளிமண்டல மற்றும் கடலியல் மாற்றத்தை சமாளிக்க, எந்நேரத்திலும் நாம் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

veeramani
ஜூலை 11, 2024 19:19

பூமி மிக அதிக வெப்பம் ..கார்பன் டை ஆக்ஸைட்..மேலும் எல்நினோவ் எப்பெக்ட்டும் சேர்ந்து காற்றின் வேகத்தை குழப்புகிறது .காரைக்குடி அழகப்பர் பொறியியல் கல்லூரியில் படித்து அமெரிக்காவில் சயின்டிஸ்ட்டாக இருக்கும் விவேகானந்தன் இதில் திறம்பட ஆராய்ச்சி செய்கிறார். இவரால் ஒரு சொல்யூஷன் கிடைக்கலாம்...


Yes
ஜூலை 09, 2024 19:20

பூமியின் நடு மையப்பகுதி இன்னமும் நெருப்பு குழம்பாகவே உள்ளது.அதன் வெப்ப அழுத்தத்தால் பூமி சுழல்கிறது. கடல் நீர் அழுந்தி அதில் சேரும்போது கடல் பொங்கி உலகம் அழியும்.


Swaminathan L
ஜூலை 09, 2024 15:38

உலகம் முழுவதும் பருவ நிலை மாற்றங்கள் இயல்புக்கு மாறாக நடக்கின்றன. உலகின் எந்த மூலையில் இயற்கைக்குப் பாதகமாக பெரும் செயல்பாடுகள் தொடர்ந்தாலும் அது உலகம் முழுவதையும் பல வகைகளில் பாதிக்கும் என்பதை மனிதர்கள் உணர்ந்து, இயற்கையை அடிமை செய்ய முயலாமல் இயற்கையோடு இசைவாக வாழ முயல வேண்டும். மனிதன் இயற்கையின் ஒரு அங்கம், பல்லாயிரம் வகை உயிரினங்களில் தானும் ஒன்று, உலக இயக்கம் மற்றும் பல்லுயிர் வாழ்க்கை சார்பு நிலையை வலியுறுத்துகிறது


subramanian
ஜூலை 09, 2024 14:38

தமிழ் நாட்டில் தீய திமுக, வங்காளத்தில் மமதை காட்டாட்சி நடப்பது வங்க கடலில் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது.


ram
ஜூலை 09, 2024 14:26

அப்படியே மெரினாவில் இருக்கும் சமாதிகள் சுனாமி வந்து இருக்கும் இடம் தெரியாமல் போகட்டும்.


Ramesh Sargam
ஜூலை 09, 2024 10:11

கவலைப்படாதீங்க. என்னதான் சுனாமி வந்தாலும், நம்ம சுடாலின் இரும்புக்கரம் கொண்டு சுனாமியை தடுத்து நிறுத்தி மக்களை காப்பாற்றிடுவார். இந்தியாவையே காப்பாத்த போறவறு, தமிழ் மக்களை காப்பாற்ற மாட்டாரா…???


ராமகிருஷ்ணன்
ஜூலை 09, 2024 07:48

தலைப்பு இப்படி இருந்தால் சரியாக இருக்கும். விடியலின் போதை ஆட்சியை பார்த்து வங்கக்கடல் போதையாகி போனது, குழம்பிப் போனது.


Yes
ஜூலை 09, 2024 06:24

பூமியில் அதி ஆழமான பகுதி வங்க கடல். பூமியில் முதன் முதலாக நீர் நிரம்பிய பகுதி.


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி