உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கடைகளை குறைத்து பார்களை கூட்டும் தமிழக அரசு!: கிளப் என்ற பெயரில் லைசென்ஸ் கொடுத்து வசூல் வேட்டை

கடைகளை குறைத்து பார்களை கூட்டும் தமிழக அரசு!: கிளப் என்ற பெயரில் லைசென்ஸ் கொடுத்து வசூல் வேட்டை

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு போட்டியாக, 'எப்.எல்., 2' பார்களில் சரக்கு விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. வெளிநாட்டு மதுபானங்களை கொள்முதல் செய்யவும், விற்பனை செய்யவும் தமிழக அரசின் சார்பில் எப்.எல்., 1, 2,3 என பலவிதமான லைசென்ஸ்கள் வழங்கப்படுகின்றன. இதில் எப்.எல்., 1 என்பது, டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு உரியது. எப்.எல்., 2 லைசென்ஸ், கிளப்களுக்கு வழங்கப்படுகிறது. ஹோட்டல்களுடன் இணைத்து 'பார்' நடத்துவதற்கு, எப்.எல்., 3 லைசென்ஸ் பெற வேண்டும்.தமிழகத்தில் தற்போதைய நிலையில், 4800க்கும் அதிகமான டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படுகின்றன. 836 ஹோட்டல்களில் பார்களுக்கு எப்.எல்., 3 லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, எப்.எல்., 2 எனப்படும் கிளப் லைசென்ஸ்களை வாங்கி, டாஸ்மாக் பார்களுக்கு போட்டியாக, பார் நடத்தும் புதிய தொழில் அறிமுகம் செய்யப்பட்டது.இதில் கோடிகளில் வருவாய் கொட்டியதால், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெரிய நகரங்களில் மட்டுமின்றி, மூன்றாம் நிலை நகரங்களிலும் அதிகளவில் துவக்கப்பட்டன.கடந்த ஆட்சியில், தேனி நகரத்தை சேர்ந்த அ.தி.மு.க.,பிரமுகரும், இந்த ஆட்சியில் திருப்புவனத்தைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகரும் இந்த தொழிலில் கொட்டி கட்டி பறக்கின்றனர்.இவர்கள் இருவர் மட்டும், 70 எப்.எல்., 2 பார்களை நடத்துகின்றனர். தற்போது தமிழகத்தில் மொத்தமாக 525க்கும் அதிகமான எப்.எல்., 2 பார்கள் இயங்கி வருகின்றன. போட்டி அதிகரித்துள்ளதால், பார் லைசென்ஸ் லஞ்சமும் பல மடங்கு அதிகமாகியுள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில், 25 - 50 லட்சம் ரூபாயாக இருந்தது. இப்போது இந்த தொகை, 35 - 75 லட்சம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதற்காக பல விதிமீறல்கள் நடக்கின்றன.இந்த பார்களில், டாஸ்மாக் விலையை விட, 25 - 30 சதவீதம் மட்டுமே, அதிக விலை வைத்து விற்கப்படுவதால், மதுக்கடைக்கு இணையாக இந்த பார்களுக்கு கூட்டம் வருகிறது.மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைத்து விட்டதாக மார் தட்டும் முதல்வருக்கு, கிளப்களின் பெயரில், எப்.எல்., 2 லைசென்ஸ் வாரி வழங்கப்படுவதும், அதற்கு ஏராளமாக லஞ்ச பணம் வசூலிக்கப்படுவதும் தெரியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நமது சிறப்பு நிருபர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

g.s,rajan
ஜன 13, 2024 23:07

இதுதான் வேளை சரியான வேளை,இதுதான் (குடிப்பதில்)வளர்ச்சி அடைந்த பாரதம் .....


adalarasan
ஜன 13, 2024 22:01

பின்னே எப்படி 60,000கோடி விற்பனை இலக்கை அடைவது?மேலும் கட்சி முக்கிய பிரமிக்கரால், சாராய ஆலைகள் வோட வேண்டாமா>?


முருகன்
ஜன 13, 2024 20:04

இது குடிப்பவர்கள் பிரச்சினை


Kundalakesi
ஜன 13, 2024 18:57

இங்கே விற்க்கப்படும் மது பானம் உள்ளூர் தயாரிப்பு மட்டமான கெமிக்கல் . வெளிநாட்டு பீர் அனுமதி இல்லை. எல்லாவற்றிலும் கமிஷன்


கருத்து சுந்தரம்
ஜன 13, 2024 18:56

Barக்குள்ளே நல்ல(?) நாடு ... நம் தமிழ்நாடு. ????????‍????????????‍????????


DVRR
ஜன 13, 2024 17:32

இது தான் உண்மையான திருட்டு திராவிட மாடல்??? என்ன சொல்வார்கள் "நாங்கள் தேர்தல் வாக்குறுதியில் சொன்ன பிரகாரம் டாஸ்மாக் கடையை குறைத்துவிட்டோம்"


Anantharaman Srinivasan
ஜன 13, 2024 17:31

கிளப்களின் பெயரில், எப்.எல்., 2 லைசென்ஸ் வாரி வழங்கப்படுவது முதல்வருக்கு தெரியாமலா நக்கும்..? கருணாநிதி குதிரை பந்தயத்தை நிறுத்தி விட்டதாக கூறி ஜெமினி மேம்பாலம் கீழ் இருபுபுறமும் குதிரை சிலைகளா திறந்தார். அதுபோல் தனயன் டாஸ்மார்க் ககடைகளை மூடி விட்டடாதாக கூறி பார்களை திறக்கிறார். புதிய மொந்தையில் பழைய கள்ளு.


hari
ஜன 13, 2024 13:51

இதுல பாருங்க.... காணவே காணோம்....... அவர்தான் தன்மான திமுக முட்டு


rsudarsan lic
ஜன 13, 2024 12:37

மரம்வெட்டி கட்சி களம் இறங்குமா?


Just imagine
ஜன 13, 2024 12:27

"பார்" வேந்தே ..... என்னை பார் வேந்தே ...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை