உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / குடியரசு தின விழாவில் வி.வி.ஐ.பி.களாக பங்கேற்கும் பழங்குடியின தம்பதி

குடியரசு தின விழாவில் வி.வி.ஐ.பி.களாக பங்கேற்கும் பழங்குடியின தம்பதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள கல்லார்குடியை சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவரது கணவர் ஜெயபால். ஆனைமலை மலைத்தொடரில் வாழும் பழங்குடியினர் உரிமைக்காக பழங்குடியின மக்களை ஒன்று திரட்டி தொடர்ந்து அறவழியில் போராடி நிலஉரிமை பெற்று தந்தவர் ராஜலட்சுமி.தன் கிராமத்தை இந்தியாவின் சிறந்த முன் மாதிரி கிராமமாக மாற்றியுள்ளார். இவரது செயலுக்கு பக்க பலமாக இருந்து செயலாற்றியவர் அவரது கணவர் ஜெயபால். இவர்களின் செயலை பாராட்டும் விதமாக இருவரும் இந்த ஆண்டு புதுடில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் நடக்கும் குடியரசு தின விழாவில் வி.வி.ஐ.பி.களாக கலந்து கொள்கின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zn2utp9a&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசின் பழங்குடியின நலத்துறை அமைச்சகத்தில் இருந்து குடியரசு தின விழாவில் பங்கேற்க இவர்களுக்கு அழைப்பு வந்துள்ளது.இவர்கள் ஜனாதிபதி தலைமையில் நடக்கும் அணிவகுப்பு மற்றும் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்கின்றனர். அதன்பின் ஜனாதிபதி வழங்கும் விருந்திலும் கலந்து கொள்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ranjani
ஜன 05, 2024 21:54

வாழ்க


THINAKAREN KARAMANI
ஜன 05, 2024 17:58

ஊருக்கு நல்லது செய்த இதுமாதிரியான தம்பதியை எப்படியோ நம்ம GOVERNMENT அடையாளம் கண்டு அவர்களுக்கு மிகச் சிறந்த பாராட்டுக்கு வழிவகை செய்த நமது அரசுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் மேலும் சிறப்புக்குரிய அந்த பழங்குடி தம்பதிகள் இருவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.


Vigilraj
ஜன 05, 2024 17:41

Recommended by Tamil Nadu government


Subramanian
ஜன 05, 2024 13:04

அருமை. வாழ்த்துகள். திருமதி ராஜலட்சுமி திரு ஜெயபால் அவர்களுக்கு


Kumar
ஜன 05, 2024 08:33

இந்த தம்பதியினருக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.... பெண்ணால் எதுவும் முடியும்...


Jai
ஜன 05, 2024 08:10

வாழ்த்துக்கள் ஜெயபால் மற்றும் ராஜலட்சுமி!!!


Ramesh Sargam
ஜன 05, 2024 07:42

ஆஹா, இதுவல்லவா ஆட்சி. எங்கோ ஒரு ஊரில் உள்ள பழங்குடியினரின் நல்ல செயலை அறிந்து, அவர்களை குடியரசு தின விழாவில் வி.வி.ஐ.பி.களாக பங்கேற்கும் படி செய்வது எப்படியாப்பட்ட ஒரு நல்ல காரியம். அவர்களை பற்றி அந்த மாநில முதல்வருக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்தாலும் இப்படி எல்லாம் செய்து அவர்களை கவுரவிக்க மாட்டார். வாழ்க மோடி. வளர்க பாஜக நாடு முழுவதும்.


நாஞ்சில் நாடோடி
ஜன 05, 2024 08:47

மாநில முதல்வருக்கு இப்படி ப ட்ட செயல்களில் விருப்பம் கிடையாது... சும்மா ஒரு விடியல் கூப்பாடு...


Kasimani Baskaran
ஜன 05, 2024 05:07

அருமை...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை