உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சைக்கிள் மீது பைக் மோதல் தொழிலாளி பலி

சைக்கிள் மீது பைக் மோதல் தொழிலாளி பலி

பாகூர் : புதுச்சேரி- கடலுார் சாலையில் பைக் மோதி, தோட்ட தொழிலாளி இறந்தார்.புதுச்சேரி, அரியாங்குப்பம் சுப்பையா நகரைச் சேர்ந்தவர் அருளப்பன், 73; தனியார் தோட்ட செடிகள் விற்பனை செய்யும் இடத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் வேலை செய்து வந்தார்.நேற்று காலை ௫.௩௦ மணிக்கு வேலைக்கு சென்று விட்டு தனது சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.புதுச்சேரி- கடலுார் சாலையை இடையார்பாளையம் சாலை சந்திப்பை அருளப்பன், கடக்க முயன்றார்.அப்பொழுது புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி அதிவேகமாக சென்ற பைக், அருளப்பன் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த அருளப்பன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை