உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஏனாமில் வியாபாரியை மிரட்டி பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது

ஏனாமில் வியாபாரியை மிரட்டி பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது

புதுச்சேரி: ஏனாமில் வியாபாரியை மிரட்டி, பணம் மற்றும் மொபைல் போனை பறித்து சென்ற இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.ஆந்திரா மாநிலம் காக்கிநாடா பகுதியை சேர்ந்தவர் அடப்பள்ளி வெகடா சத்தியநாராயணன், 62. இவர் சுப நிகழ்ச்சிகளுக்கு பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறார். கடந்த 17ம் இவர் ஏனாமில் உள்ள நடந்த சுப நிகழ்ச்சியில் தனது வியாபாரத்தை முடித்து விட்டு, ஏனாம் பழைய பஸ் நிலையத்தில் பஸ் ஏறுவதற்கு நின்று கொண்டிருந்தார்.அங்கு பைக்கில் வந்த இருவர் நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என கேட்டு, அவரிடம் அதற்கு நாங்கள் காக்கிநாடாவுக்கு செல்கிறோம். நீங்கள் வருகிறீர்களா என கேட்டனர். அதைநம்பி அவர்களுடன் பைக்கில் ஏறி சென்றார்.வழியில் பைக்கை நிறுத்தி, அடப்பள்ளி வெகடா சத்தியநாராயணனை மிரட்டி, ரூ. 6 ஆயிரத்து 500 பணம், மொபைல் போனை பறித்தனர். மொபைல் போனில் இருந்த வங்கி விபரம் மற்றும் ஏ.டி.எம்., கார்டு நம்பர் மூலம், அவரது வங்கி கணக்கில் இருந்து 52 ஆயிரத்தை மற்றோரு வங்கி கணக்கிற்கு மாற்றிவிட்டனர். இதுபற்றி, அவர் ஏனாம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, பணத்தை பறித்து சென்ற காக்கிநாடாவை சேர்ந்த விக்னேஷ்,22; சதீஷ், 28; ஆகியோரை கைது செய்து, நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை