உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 23 ஆடுகள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலை

23 ஆடுகள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலை

மரக்காணம் : மரக்காணம் அடுத்த கட்டளை கிராமத்தில், பட்டியில் இருந்த 23 ஆடுகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மரக்காணம் அருகே உள்ள கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி, 68; இவரது மனைவி தெய்வாணை, 55; இருவரும் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகின்றனர். இவர்களது விவசாய நிலத்தில் இரண்டு ஆட்டு பட்டி அமைத்து இரவு நேரத்தில் அதில் ஆடுகளை அடைத்து வைத்துவிட்டு அருகிலுள்ள வீட்டிற்கு சென்று தங்கிவிடுவர். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று முன்தினம் ஆட்டு பட்டிக்கு சென்று, 23 ஆடுகளை திருடி, வாகனங்களில் ஏற்றி சென்றனர். இது குறித்து மூர்த்தி கொடுத்த புகாரில், பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிந்து, ஆடுகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி