மேலும் செய்திகள்
அரியாங்குப்பத்தில் பா.ஜ., காலண்டர் வழங்கல்
17 hour(s) ago
ஐகோர்ட் நீதிபதி முதல்வருடன் சந்திப்பு
17 hour(s) ago
புதிய அங்கன்வாடி அமைக்க பூமி பூஜை
17 hour(s) ago
காகிதக்கூழ் கைவினைப் பயிற்சி
17 hour(s) ago
புதுச்சேரி : கூனிச்சம்பட்டு ஏரிக்கரையில் விற்பனைக்கு வைத்திருந்த 25 லிட்டர் சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். லோக்சபா தேர்தலை முன்னிட்ட திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் நேற்று கூனிச்சம்பட்டு பழைய ஏரிக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது போலீசார் வருவதைக் கண்ட நபர் ஒருவர் அவர் வைத்திருந்த சாக்கு பையை கீழே போட்டு விட்டு தப்பி ஓடினார்.இதையடுத்து, போலீசார் அந்தப் பையை சோதனை செய்தபோது 25 லிட்டர் அளவிலான சாராய பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. சாராய பாக்கெட்களை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை கலால் துறையிடம் ஒப்படைத்தனர். மேலும், தப்பி ஓடிய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago