உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆம்ஆத்மி நிர்வாகி நுாதன போராட்டம்

ஆம்ஆத்மி நிர்வாகி நுாதன போராட்டம்

புதுச்சேரி : டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கைது செய்யப்பட்டதை கண்டித்து, புதுச்சேரியில் ஆம்.ஆத்மி, கட்சியினர் போராட்டங்கள் நடத்தி கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுத்தம் சுந்தர்ராஜன் என்பவர் நேற்று இரவு ராஜா தியேட்டர் சந்திப்பில் வாயில் துணியுடன் நின்று, கையில் தராசு ஏந்தி, பொய் வழக்கை கண்டித்து அமைதியான முறையில் கண்டனத்தை தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்