உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் டவரில் ஏறி போராட்டம்

அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் டவரில் ஏறி போராட்டம்

புதுச்சேரி: அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து புதுச்சேரியில் ஆம் ஆத்மி கட்சியினர் மொபைல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதிய மதுபான கொள்கை வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேற்று முன்தினம் இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. அதை கண்டித்து, புதுச்சேரி ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் சுந்தராஜன் தலைமையில், கட்சி நிர்வாகிகள் சிலர் காமராஜர் சாலை, பிருந்தாவனம் ஸ்டேட் பாங்க் எதிரில் தனியார் கட்டடத்தின் மீதுள்ள மொபைல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினர்.போலீசார் போராட்டக்காரர்களை கீழே இறங்க வலியுறுத்தினர். ஆனால் இறங்க மறுத்து தொடர்ந்து கோஷம் எழுப்பினர். மொபைல் டவர் மீது ஏறிய 3 பேர் டவரின் பாதி துாரம் செல்வதற்குள் வெயில் காரணமாக ஏற முடியாமல் பாதியில் நின்றனர்.கட்டடத்தை பாராமரிக்கும் பெண் ஒருவர், போராட்டம் வேண்டும் என்றால் பொது இடத்தில் நடத்துங்கள் என் அனுமதியின்றி எப்படி என் கட்டடத்தின் மீது ஏறினீர்கள் என கேட்டு டவருக்கு செல்லும் பாதையை பூட்டினார்.போலீசாரும் எப்போழுது வேண்டுமானாலும், கீழே இறங்குங்கள் என கூறிவிட்டு ஓரமாக நின்று விட்டனர். இதனிடையே அக்கட்சியினர் சிலர் அரவிந்த் கெஜ்ரிவால் படத்துடன், சாலையில் படுத்து கொண்டு கோஷம் எழுப்பினர். இதனால் காமராஜர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.போலீசார் கைது நடவடிக்கை எடுக்காமல், ஓரமாக நின்றிருந்தனர். வெயில் காரணமாக டவர் மீது ஏற முடியாமல் தவித்த மூவரும் வேறு வழியின்றி கிழே இறங்கி வந்தனர். டவரில் இருந்து இறங்கி வந்த 3 பேர் மற்றும் மறியலில் ஈடுப்பட்ட 9 பேர் என, 12 பேரை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை