| ADDED : ஜூலை 23, 2024 02:29 AM
புதுச்சேரி : 'சட்ட விரோதமாக பேனர்கள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, வடக்கு சப் கலெக்டர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.புதுச்சேரியில் சட்ட விரோதமான பேனர்கள், கட் அவுட்கள் வைக்கப்பட்டு வருகிறது. சட்ட விரோத பேனர்கள் குறித்து போட்டோ எடுத்து '94433 83418' என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு புகார் அனுப் பலாம்; பேனர் வைத்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, வடக்கு சப் கலெக்டர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் அறிவித்து இருந்தார்.இதுகுறித்து, சப் கலெக்டர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் கூறியதாவது:புதுச்சேரியில் பொது இடங்களில் சட்ட விரோதமாக பேனர்கள் வைத்துள்ளவர்கள் மீது 'புதுச்சேரி திறந்தவெளி (அழகு சீர்குலைப்பு தடுப்பு) - 2000' சட்டத்தின் பிரிவு 6ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.தற்போது, 20 புகார்கள் வாட்ஸ் ஆப் மூலமாக வந்துள்ளது. இதன் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பிறந்த நாள், திருமணம், கடை திறப்பு விழா, கோவில் திருவிழா, திரைப்பட வெளி யீடு, தொழில் விளம்பரங்கள் போன்ற எதற்கும் பேனர்கள் வைக்க கூடாது.பொது இடங்களில் சட்ட விரோதமாக பேனர் வைப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.பேனர் வைப்பவர் தனி நபராக இருந்தாலும், குழுவாக இருந்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.சாலைகள் மற்றும் நடைபாதைகளில் வைக்கப்பட்டுள்ள சட்ட விரோத மற்றும் அனுமதியில்லா பேனர்கள் குறித்து போட்டோ எடுத்து வாட்ஸ் ஆப்பில் (94433 83418) அனுப்பி புகார் தெரிவிக்கலாம். போட்டோ எடுக்கப் பட்ட தேதி, நேரம், சம்பந்தப்பட்ட இடம் குறித்த விபரங்கள் போட்டோவில் இடம் பெற்று இருக்க வேண்டும்.சட்ட விரோத பேனர்களை அகற்ற செல்லும் அரசு ஊழியர்களை, சிலர் தடுத்து நிறுத்தி தாக்குவதால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. அரசு ஊழியர்கள் தங்கள் கடமையை செய்வதை தடுப்பது என்பது, பாரதிய தண்டனை சட்டம் -2023 பிரிவு 221ன் கீழ் தண்டனைக்குரிய குற்ற மாகும். இதற்கு சிறை தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டும் விதிக்கப்படும்.இவ்வாறு அர்ஜூன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.