| ADDED : ஜூன் 12, 2024 07:17 AM
புதுச்சேரி : புனரமைப்பு பணி காரணமாக, புதுச்சேரி பஸ் நிலையம் ஏ.எப்.டி., மைதானத்தில் மாற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம், நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.எம்.எல்.ஏ.கள்., நேரு, அனிபால் கென்னடி ஆகியோர் தலைமை தாங்கினார். கூட்டத்தில், பஸ்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக தற்காலிகமாக அமைக்கப்பட்ட பஸ் நிலையம் பொதுமக்களுக்கு ஏற்றவாறு உள்ளதா எனவும் மற்றும் சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிவறைகள் சரியான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா, நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளதா, என்பது குறித்தும், அரசு மற்றும் தனியார் பஸ்கள் பஸ் நிலையத்திற்கு செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.கூட்டத்தில் ஆணையர் கந்தசாமி, போக்குவரத்து எஸ்.பி., செல்வம், ஸ்மார்ட் சிட்டி திட்ட தொழில்நுட்ப அதிகாரி ரவிச்சந்திரன், செயற்பொறியாளர் சிவபாலன், மின்துறை உதவி பொறியாளர் ஜேம்ஸ் மற்றும் உருளையான்பேட்டை போலீசார், போக்குவரத்து துறை அதிகாரிகள், தமிழக அரசு போக்குவரத்து துறை பிரதிநிதிகள், புதுச்சேரி நகராட்சி அதிகாரிகள், தனியார் பஸ் உரிமையாளர் நல சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.