உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இரண்டாண்டு ஆசிரியர் பட்டய படிப்பிற்கு வரும் 15ம் தேதி முதல் விண்ணப்பம் வரவேற்பு

இரண்டாண்டு ஆசிரியர் பட்டய படிப்பிற்கு வரும் 15ம் தேதி முதல் விண்ணப்பம் வரவேற்பு

புதுச்சேரி: இரண்டாண்டு ஆசிரியர் பட்டய படிப்பிற்கு வரும் 15ம்தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது.இது குறித்து புதுச்சேரி மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் சுகுணா சுகிர்த பாய் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:புதுச்சேரி அரசு கல்வித் துறையில் பள்ளி கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கி வரும்,புதுச்சேரி மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் 2024-25ம் கல்வி ஆண்டிற்கான இரண்டாண்டு ஆசிரியர் பட்டய படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.புதுச்சேரியை சேர்ந்த மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.இப்பட்டய படிப்பில் சேர விரும்புவோர் பிளஸ்2 பள்ளி தேர்வில் அல்லது அதற்கு சமமான தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும். அட்டவணை இனத்தவர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் குறைந்தபட்சம் 45 மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும்.சேர்க்கைக்கான அதிகபட்ச வயது 29 ஆகும். 31.07.2024 அன்று 29 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.இருப்பினம் அட்டவணை இனத்தவருக்கு 5 ஆண்களும்,பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை உண்டு.சேர்க்கை விண்ணப்பம் வரும் 15ம் தேதி முதல் அடுத்த மாதம் 15ம் தேதி வரை,அனைத்து அலுவலக நாட்களில்,லாஸ்பேட்டை தொல்காப்பியர் வீதி,மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி மையத்தில் கிடைக்கும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான நகல் சான்றிதழ்களுடன் அடுத்தமாதம் 20ம் தேதி மாலை 5 மணிக்குள்,மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் சமர்பித்தல் வேண்டும். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ