உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குடிபோதையில் தகராறு 3 பேர் கைது

குடிபோதையில் தகராறு 3 பேர் கைது

திருக்கனுார் : குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூராக தகராறில் ஈடுபட்ட மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். திருக்கனுார் அடுத்த கொடாத்துார் ஐயனாரப்பன் கோவில் அருகே குடிபோதையில் சிலர் அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு இடையூராக தகராறில் ஈடுபட்டு வருவதாக திருக்கனுார் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தகராறில் ஈடுபட்ட கொ.மணவெளி புதுநகர் பகுதியைச் சேர்ந்த கலைமதி, 24; பிரேம்குமார், 22; உதயக்குமார், 31; ஆகியோரை பிடித்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ