உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தகராறு செய்த 3 பேர் கைது

தகராறு செய்த 3 பேர் கைது

திருக்கனுார், : திருக்கனுார் சப் - இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். கூனிச்சம்பட்டு ஏரிக்கரை ரோட்டில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட விக்கிர வாண்டி தென்னவராயன்பட்டு பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன், 33; என்பவரை போலீசார் கைது செய்தனர்.இதேபோல், காட்டேரிக்குப்பம் போலீஸ் எல்லைக்குட்பட்ட லிங்காரெட்டிப்பாளையத்தில் பொது இடத்தில் ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்ட விநாயகபுரம், விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்த ராஜு, 45; கண்ணன், 32; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ