உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முன்னெச்சரிக்கையாக 44 பேர் மீது வழக்கு பதிவு

முன்னெச்சரிக்கையாக 44 பேர் மீது வழக்கு பதிவு

புதுச்சேரி : புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 44 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், 4 பேர் ஊருக்குள் நுழைய தடை விதிக்க பரிந்துரை செய்துள்ளனர். புதுச்சேரி லோக்சபா தேர்தலை அமைதியாகவும், நேர்மையாக நடத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சட்டம் ஒழுங்கு கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுச்சேரி முழுதும் நேற்று முன்தினம் வரை, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்குடன் உள்ள 204 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, சுய உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கி உள்ளனர். இந்நிலையில் நேற்று புதுச்சேரி பகுதியில் 28 பேர் மீதும், காரைக்காலில் 12 பேர் மீதும், மாகியில் 3, ஏனாமில் ஒருவர் மீது என மொத்தம் 44 பேர் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை வழக்கு பதிவு செய்தனர். முத்தியால்பேட்டை வாழைக்குளம் அரவிந்த், திருவள்ளுவர் நகர் ஜெயசீலன், நோணாங்குப்பம் கலைவாணன், தவளக்குப்பம் தானாம்பாளையம் நல்லவாடு விஷ்ணு, ஆகியோரை ஊருக்குள் நுழைய தடை விதிக்க முத்தியால்பேட்டை மற்றும் அரியாங்குப்பம் போலீசார் கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி