மேலும் செய்திகள்
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
15 hour(s) ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
15 hour(s) ago
புதுச்சேரி: கிழக்கு போக்குவரத்து போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தியிருந்த 2 ஆட்டோக்கள் தீயில் எரிந்து நாசமானது.புதுச்சேரி கிழக்கு போக்குவரத்து போலீசார், விபத்து வழக்கில் சிக்கும் வாகனங்களை பறிமுதல் செய்து செஞ்சி சாலை ஆம்பூர் சாலை இடையில் உள்ள பெரிய வாய்க்கால் மேல் பகுதியில் நிறுத்தி வைத்திருந்தனர்.நேற்று காலை 7:00 மணிக்கு, போக்குவரத்து போலீஸ் நிலையம் முன், நிறுத்தி இருந்த ஆட்டோ ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்தனர். இதில், 2 ஆட்டோக்கள் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
15 hour(s) ago
15 hour(s) ago