உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆவணி அவிட்ட காயத்ரி ஜெப மகா யாகம்

ஆவணி அவிட்ட காயத்ரி ஜெப மகா யாகம்

புதுச்சேரி, : புதுச்சேரியில் ஆவணி அவிட்டத்தையொட்டி, நடந்த காயத்ரி ஜெப மகா யாகத்தில் ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.புதுச்சேரி பிராமண சேவா பவுண்டேஷன், அறவோர் முன்னேற்ற கழகம், காரைக்கால் பிராமண சமாஜம் இணைந்து, ஆரிய வைஸ்ய சமாஜம் நடத்தும், 4ம் ஆண்டு ஆவணி அவிட்ட வைபவம் கிருஷ்ணா நகர், சின்மயா சூர்ய மகாலில் நேற்று முன்தினம் நடந்தது.இதில் ரிக், யஜூர் வேதத்தை சேர்ந்த 200 பேர் பங்கேற்றனர். அனைவருக்கும் ஆடைகள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.நேற்று காலை 5:30 மணிக்கு காயத்ரி ஜெபத்தையொட்டி, மகா யாகம் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைவர் ராகவேந்திரன் சிவம், செயலாளர் ரமேஷ் மற்றும் தலைமைக்குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி