உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் உலக சாதனை முயற்சி

பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் உலக சாதனை முயற்சி

புதுச்சேரி: புதுச்சேரி பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் சர்வதேச புத்தகத்தில் இடம் பெற, உலக சாதனை முயற்சியை மேற்கொண்டனர். புதுச்சேரி பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளியில், 78,வது சுதந்திர தின விழா, பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் தலைமையில் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா மற்றும் காயத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சர்வதேச சாதனை புத்தகத்தில் இடம் பெற, பள்ளி யு.கே.ஜி., மாணவர் கிஷான், குறைந்த நிமிடங்களில் ஆங்கிலத்தில், 250 ஒத்த ஓசை உடைய சொற்களை, 2 நிமிடம், 32 வினாடிகளில் விரைவாக வாசித்தார். அதேபோல, யு.கே.ஜி., மாணவர் ஆதித்யா, மிக அதிகமான சொற்களை படிக்கும் முயற்சியில், 300 ஆங்கில வார்த்தைகளை, 4நிமிடம், 9 வினாடிகளில் வாசித்தார். இந்த சாதனையை சிறப்பு விருந்தினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர். இதையடுத்து மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை