உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாகவத உபன்யாசம் நாளை துவக்கம்

பாகவத உபன்யாசம் நாளை துவக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் நடக்கும் ஸ்ரீ ஹரியின் பாகவத உபன்யாசத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி, கிருஷ்ண பிரேமிக பஜனை மண்டலி சார்பில், எல்லப்பிள்ளை சாவடி, சாராதாம்பாள் கோவிலில், ஸ்ரீஹரியின் பாகவத உபன்யாசம் நாளை, 8ம் தேதி துவங்குகிறது. இந்த உபன்யாசம், நாள்தோறும் இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை நடக்கிறது.இதில் பீஷ்ம ஸ்துதி, துருவ சரித்திரம், பிரகலாத சரித்திரம், கஜேந்திர மோட்சம், வாமன அவதாரம், கிருஷ்ண அவதாரம், பால லீலை, சனி கிருஷ்ண லீலை உள்ளிட்ட, பல்வேறு தலைப்புகளில் உபன்யாசம் நடக்க உள்ளது. வரும், 14ம் தேதி காலை 8:30 மணி முதல் 12:30 மணி வரை உஞ்ச விருத்தி, திவ்ய நாமம் மற்றும் ராதா கல்யாண மகோற்சவம் நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை, விசாகாவால், ருக்மணி கல்யாண சங்கீத உபன்யாசம் நிகழ்த்தப்பட உள்ளது. அன்றைய தினத்தோடு, உபன்யாச நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.இதில், நாள்தோறும் காலை 7:00 மணி முதல் 12:00 மணி வரை பாகவத மூல பாராயணம் நடக்கிறது. சாரம், ஜெயராம் நகரில் வரும், 12 மற்றும் 13ம் தேதி மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை, அஷ்டமதி பஜனை நடக்க உள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிருஷ்ண பிரேமிக பஜனை மண்டலியினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை