உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ஜ., அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் கவர்னருடன் அடுத்தடுத்து சந்திப்பு  புதுச்சேரி அரசியலில் பரபரப்பு

பா.ஜ., அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் கவர்னருடன் அடுத்தடுத்து சந்திப்பு  புதுச்சேரி அரசியலில் பரபரப்பு

புதுச்சேரி: பா.ஜ., எம்.எல். ஏ.,க் கள் அடுத்தடுத்து கவர்னரை சந்தித்து வருவது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சேரியில் லோக்சபா தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட அமைச்சர் நமச்சிவாயம் தோல்வியடைந்தார். அதனைத் தொடர்ந்து பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம் தலைமையில் ஜான்குமார், வெங்கடேசன், அசோக்பாபு, பா.ஜ., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.,க் கள் அங்காளன், சிவசங்கரன் ஆகியோர் தனியார் ஓட்டலில் ரகசிய கூட்டம் நடத்தி அமைச்சர் பதவியை சுழற்சி முறையில் வழங்க வேண்டும் என போர்க்கொடி உயர்த்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதனைத் தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் நேற்று முன்தினம் மாலை கவர்னர் ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார்.இந்நிலையில் நேற்று காலை அமைச்சர் சாய்சரவணன்குமார், அசோக்பாபு எம்.எல்.ஏ., ஆகி யோர் கவர்னரை சந்தித்தனர். மதியம் சபாநாயகர் செல்வம், அங்காளன் எம்.எல்.ஏ., தனித்தனியாக கவர்னரை சந்தித்து பேசினர்.இதுகுறித்து பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களிடம் கேட்டபோது, தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து முறையிட்டதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி