| ADDED : ஜூலை 09, 2024 04:08 AM
புதுச்சேரி, : அங்காளன் எம்.எல்.ஏ.,வுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள் டி.ஜி.பி.,யிடம் மனு அளித்தனர்.முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இதுதொடர்பாக அங்காளன் எம்.எல்.ஏ., அளித்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. அங்காளனுக்கு என்.ஆர்.காங்., பிரமுகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.இந்நிலையில், எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், அங்காளன் ஆகியோர் நேற்று டி.ஜி.பி., அலுவலகம் வந்தனர். அங்காளன் எம்.எல்.ஏ., வுக்கு, 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.