உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு மருத்துவமனையில் பணிபுரிய சிறப்பு டாக்டர்கள் முன் வருவதில்லை முதல்வர் ரங்கசாமி ஆதங்கம்

அரசு மருத்துவமனையில் பணிபுரிய சிறப்பு டாக்டர்கள் முன் வருவதில்லை முதல்வர் ரங்கசாமி ஆதங்கம்

புதுச்சேரி: அரசு பொதுமருத்துவமனையில் பணிபுரிய சிறப்பு டாக்டர்கள் முன் வருவதில்லை என முதல்வர் ரங்கசாமி வேதனை தெரிவித்துள்ளார். கேள்வி நேரத்தில் நேற்று நடந்த விவாதம்:அசோக்பாபு (பா.ஜ.,): அரசு பொது மருத்துவமனையில் உடல் பருமன் குறைப்பதற்கு தனிப்பிரிவு ஏற்படுத்தி சிகிச்சை வழங்கும் திட்டம் அரசிடம் உள்ளதா. கல்லீரல் அறுவை சிகிச்சை அளிக்க தனிப்பிரிவு ஏற்படுத்தும் எண்ணம் அரசுக்கு உண்டாமுதல்வர் ரங்கசாமி: உடல் பருமனை குறைக்கவும், கல்லீரல் சிகிச்சைக்கு அரசு பொது மருத்துவமனையில் தனி பிரிவு உருவாக்கும் திட்டம் இல்லை. கல்லீரல் அறுவை சிகிச்சை தேவைபடும் நோயாளிகளை உயர் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றது.அசோக்பாபு: புதுச்சேரியில் உடல் பருமன் சிகிச்சைக்கு அரசு பொது மருத்துவமனையில் தனி பிரிவை உருவாக்க வேண்டும். முதல்வர் ரங்கசாமி: உடல் பருமனை குறைக்க அரசு மருத்துவமனையில் டாக்டர் சிகிச்சை அளிக்கின்றனர். ஆனால் கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் அரசு பொதுமருத்துவமனையில் பணியாற்ற முன் வருவதில்லை. வெளியே அறுவை சிகிச்சைக்கு பல லட்சம் வாங்குகின்றனர். ஆனால் அரசு பொதுமருத்துவமனையில் அவ்வளவு தருவதில்லை என்பதால், சிறப்பு மருத்துவர்கள் தேடினாலும் கிடைப்பதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை