உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதல்வர் பிறந்த நாள் விழா

முதல்வர் பிறந்த நாள் விழா

புதுச்சேரி : முதல்வர் ரங்கசாமி பிறந்தநாளையொட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்கள், இனிப்பு வழங்கப்பட்டது.முதல்வர் ரங்கசாமி 75-வது பிறந்த நாளையொட்டி கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்பப்பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு எழுதுப்பொருட்கள் மற்றும் லட்டு வழங்கி கொண்டாடப்பட்டது.கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்பப்பள்ளி மாணவர்கள் 200 பேருக்கு நோட்டுப் புத்தகம் எழுது பொருட்கள் லட்டு இனிப்பு வழங்கப்பட்டது. அதேபோல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 300 பேருக்கு லட்டுவழங்கப்பட்டது. அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் ஒன்று கூடி முதல்வர் ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் கரிக்கலாம்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெகன்நாதன், குமரேசன், கமலநாதன், குப்புசாமி, சுகானந்தம் ஆகியோர் இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சதீஷ், சுந்தரவரதன் ஆகியோர் ஆசிரியர்களுடன் இணைந்து செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை