உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவருக்கு கத்தி வெட்டு

மாணவருக்கு கத்தி வெட்டு

புதுச்சேரி: கல்லுாரி மாணவரை கத்தியால் வெட்டியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.வில்லியனுார், வீரவாஞ்சி நகர், நீலாம்பரி வீதியைச் சேர்ந்தவர் சீனுவாசன் மகன் தனகோபால், 19; அதே பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.சி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் அதே கல்லுாரியில் பி.சி.ஏ., இரண்டாமாண்டு படிக்கும் சுல்தான்பேட்டை சேர்ந்த ெஷரிப் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.இந்நிலையில் தனகோபால் நண்பர்களுடன் நேற்று முன்தினம் மாலை அரசூர் சாராயக்கடை அருகே நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த ெஷரிப் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து தனகோபாலை தாக்கி, காய்கறி வெட்டும் கத்தியால் வலது கையில் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச் சென்றனர். தனகோபால் கொடுத்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, கத்தியால் வெட்டியவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை