உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அழுகிய நிலையில் பிரேதம்: போலீசார் விசாரணை

அழுகிய நிலையில் பிரேதம்: போலீசார் விசாரணை

அரியாங்குப்பம் : அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் இறந்து கிடந்தவர் கொலை செய்யப்பட்டு இறந்தாரா என்ற கோணாத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். அரியாங்குப்பம் தேங்காய்த்திட்டு வீதி, சாமிநாத நாயக்கர் வீதி சந்திப்பில், பாழடைந்த ஒரு வீட்டில் நேற்று துர்நாற்றம் வீசியது.அப்பகுதியினர் சென்று பார்த்த போது, அங்கு அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். அவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என எந்த விபரமும் தெரியவில்லை. தனியாக ஒரு வீட்டில் இறந்து கிடந்தவரை யாரவது வெளியில் இருந்து அழைத்து வந்து கொலை செய்தனரா, அல்லது வேறு காரணமாக அந்த நபர் இறந்துள்ளரா என அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை