உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுகாதார சீர்கேட்டில் இருந்து மக்களை காக்க கோரிக்கை

சுகாதார சீர்கேட்டில் இருந்து மக்களை காக்க கோரிக்கை

புதுச்சேரி : சுகாதார சீர்கேட்டில் இருந்து பொதுமக்களை காத்திட அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முன்னாள் சபாநாயகர் கண்ணன் மகன் விக்னேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:புதுச்சேரியில் கழிவுநீர் வாய்க்காலில், விஷ வாயு கசிதலும், அடைப்பால் கழிவுநீர் வழிந்தோடி சுகாதார சீர்கேடு விளைவிக்கும் நிகழ்வு தொடர்கிறது.'ஸ்மார்ட் சிட்டி'யின், மையப்பகுதியான செட்டித்தெரு போன்ற பிரதான வீதிகளிலும், கால்வாய் அடைப்பினால், 'மேன்ேஹால்' வழியே, அசுத்தமான, கழிவுநீர் வழிந்தோடி பொதுமக்கள் அவதியடைகின்றனர். மாணவ - மாணவியருக்கும், சுகாதார சீர்கேடு விளைவிக்கிறது. சுற்றுலா பயணிகளையும் முகம் சுளிக்க வைக்கிறது.பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியப்போக்கே இதற்கு முக்கிய காரணம். சுகாதார சீர்கேட்டில் இருந்து பொதுமக்களை காத்திட, அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை