உள்ளூர் செய்திகள்

தீமிதி உற்சவம்

திருக்கனுார் : காட்டேரிக்குப்பம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் நாளை(21ம் தேதி)நடக்கிறது. திருக்கனுார் அடுத்த காட்டேரிக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி உற்சவம் கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.இதையொட்டி, தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.இந்நிலையில், கடந்த 16ம் தேதி இரவு 7:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து, முக்கிய நிகழ்வாக, வரும் 21ம் தேதி மாலை 4:00 மணிக்கு தீமிதி உற்சவமும், 22ம் தேதி இரவு 8:00 மணிக்கு தெப்ப உற்சவமும், 23ம் தேதி காலை 7:00 மணிக்கு தர்மர் பட்டாபிஷேகமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை