| ADDED : மே 09, 2024 04:29 AM
புதுச்சேரி : தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி தி.மு.க., அமைப்பாளர் சிவா பரிந்துரையின்படி, தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவைக்கு புதிய நிர்வாகிகளை, மாநில பேரவை பொதுச் செயலாளர் சண்முகம் எம்.பி., அறிவித்துள்ளார்.அதன்படி, புதுச்சேரி மாநில தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை அமைப்பாளராக அண்ணா அடைக்கலம் இரண்டாவது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மாநில தலைவராக அங்காளன், துணைத் தலைவர்களாக ராமகிருஷ்ணன்காயாரோகணம் ஆகியோரும், துணை அமைப்பாளர்களாக துரை, ராஜேந்திரன், சீனுவாசன், ரவி, கண்ணன், ரவி, சிவக்குமார், மிஷேல் நியமிக்கப் பட்டுள்ளனர்.புதிய நிர்வாகிகள் மாநில அமைப்பாளர் சிவாவை கட்சி தலைமை அலுவலகத்தில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.தொகுதி செயலாளர்கள் சக்திவேல், தியாகராஜன், மாநில நெசவாளர் அணி அமைப்பாளர் செந்தில்முருகன், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் நித்திஷ் உடனிருந்தனர்.