உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சென்டாக் கவுன்சிலிங்கில் சந்தேகமா? இணைய வழியில் விளக்கம் பெறலாம்!

சென்டாக் கவுன்சிலிங்கில் சந்தேகமா? இணைய வழியில் விளக்கம் பெறலாம்!

சென்டாக் மாணவர் சேர்க்கை சம்பந்தமான அனைத்து சந்தேகங்களுக்கும் இன்று நடக்கும் இணையவழி கலந்துரையாடலில் விளக்கம் பெறலாம்.புதுச்சேரியில் உயர்கல்வி சேர்க்கைக்கான சென்டாக் அமைப்பு, நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை இல்லாத படிப்புகளுக்கு, கடந்த 8ம் தேதியில் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்களை பெற்று வருகிறது. போட்டி போட்டு மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் பல்வேறு சந்தேகங்கள் மாணவர்களுக்கு எழுகிறது. இதற்கான விளக்கங்களை கேட்பதற்காக சென்டாக் அலுவலகத்திற்கு நேரில் சென்று வருகின்றனர். இதுபோன்ற சந்தேகங்களை தீர்ப்பதற்காக கூகுள் மீட் மூலம் கலந்துரையாடி விளக்கம் அளிக்க உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.இந்த இணையவழி கலந்துரையாடல் இன்று 19ம் தேதி காலை 10:00 மணி முதல், மதியம் 12:00 மணி வரை https://meet.google.com/rep-xhiq-ski என்ற கூகுள் இணைய தொடர்பில் நடக்க உள்ளது. மாணவர்கள், பெற்றோர்களின் சந்தேகங்களுக்கு சென்டாக் அதிகாரிகள், கல்வியாளர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர். எனவே, சென்டாக் சம்பந்தப்பட்ட அனைத்து கேள்விகளையும் எழுப்பி விளக்கம் பெறலாம். உயர் கல்வி துறையின் கீழ் உள்ள கல்லுாரிகள், ஒவ்வொரு கல்லுாரியில் உள்ள படிப்புகள் குறித்து உயர் கல்வி துறை பட்டியலிட திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை