உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொதுப்பணி துறையில் அவசர நடவடிக்கை குழு

பொதுப்பணி துறையில் அவசர நடவடிக்கை குழு

புதுச்சேரி : கழிவு நீர் அடைப்புகள் தொடர்பாக அவசர நடவடிக்கை குழு உருவாக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து உள்ளாட்சித்துறை இயக்குனர் சக்திவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரியில் நேற்று நடந்த சோகமான நிகழ்வு, கழிவு நீர் குழாய் விஷவாயு சம்பவங்கள் எதிர் காலத்தில் நிகழாமால் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மக்கள், சுற்றுப்புறத்தில் உள்ள கழிவுநீர்த் தொட்டி மற்றும் கழிவு நீர் வாய்க்கால் அடைப்பு, அதை துாய்மைப்படுத்துதல் சம்பந்தமான புகார்கள் மற்றும் தகவல்களை, புதுச்சேரி உள்ளாட்சித் துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ள, பொதுப்பணித்துறை அலுவலகத்தில் செயல்படும் அவசர கழிவுநீர் நடவடிக்கை குழுவின் 14420 என்ற கட்டணமில்லா தொலைபேசியை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.இக்குழுவின் மூலம் பொதுப்பணித்துறையில் கழிவு நீர் சுகாதாரப் பிரிவு மற்றும் அந்தந்த நகராட்சிகளுடன் இணைந்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி