உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இன்ஜினியர் மாயம்: போலீசில் தந்தை புகார்

இன்ஜினியர் மாயம்: போலீசில் தந்தை புகார்

அரியாங்குப்பம் : சென்னை தனியார் கம்பெனியில் வேலை செய்த இன்ஜினியரை காணவில்லை என புகாரை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அரியாங்குப்பம் அருந்ததிபுரம், அன்னை நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் கவிபாரதி, 23; இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். கடந்த 6ம் தேதி சென்னையில் இருந்து அவரது வீட்டிற்கு வந்தார். வீட்டில் கம்பெனி வேலை தொடர்பாக சோகமாக இருந்தார். 7ம் தேதி நண்பர்களை பார்க்க செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். மீண்டும் அவர் வீட்டுக்கு வரவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. கவிபாரதியின் தந்தை கொடுத்த புகாரில் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை