உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குடிமை பணி தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு கட்டுரை போட்டி

குடிமை பணி தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு கட்டுரை போட்டி

புதுச்சேரி: குடிமை பணி தினத்தையொட்டி, பொது நிர்வாக நிறுவனம் சார்பில், மாணவர்களுக்கு கட்டுரை போட்டி நடத்தப்பட உள்ளது.இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் தலைவர் தனபால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின், புதுச்சேரி கிளை சார்பில், வரும் 20ம் தேதி குடிமை பணி தினம் கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி, குடிமை பணிக்கு மாணவர்களை தயார் செய்வது பற்றி கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. மேலும், மாறிவரும் உலகில் பொது சேவை, பொதுமக்களுக்கான நிர்வாகம், குடிமை பணி தின நன்மைகள் என்ற தலைப்புகளில் மாணவர்களுக்கு கட்டுரை போட்டி நடத்தப்படுகிறது.அதில், பங்கேற்பவர்கள், ஏதாவது, ஒரு தலைப்பில், 500 வார்த்தைகளுக்கு மிகாமல், தமிழ், அல்லது ஆங்கிலத்தில் கட்டுரை எழுதலாம். சிறந்த கட்டுரைக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். வரும் 15ம் தேதி கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாளாகும். பொது நிர்வாகத்தில், சிறந்த அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.இவ்வாறு செய்திகுறிப்பில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை