புதுச்சேரி: புதுச்சேரியில் செல்ல நாய்க்காக இருவர் சண்டை போட்டு, காவல் நிலையம் சென்றது சுவாரசியத்தை ஏற்படுத்தியது.புதுச்சேரி நகரப் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர்தனது வீட்டில், ஒன்றரை வயதுடைய, 'லேபரடார்' இனத்தை சேர்ந்த பெண் நாய்க்கு, 'சாரா' என பெயரிட்டு செல்லமாக வளர்த்து வந்தார். அவர் பிரான்ஸ் செல்வதற்கு முயற்சித்து வந்தார். அதனால் தான் வளர்த்த செல்ல நாயை, நல்ல முறையில் வளர்க்க இடையன்சாவடியை சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் கொடுத்து விட்டார்.ஆனால், அப்பெண்ணின்வெளிநாட்டு பயணம் திடீரென ரத்தானது. அதனால், அடுத்த சில தினங்களில் அவர்அந்த இளைஞரிடம், நாய் 'சாரா'வை, தனக்கு தருமாறு கேட்டார். அவரோ, ஏதேதோ காரணங்களை கூறி, நான்கு மாதங்கள் நாயை தராமல் இழுத்தடித்துள்ளார்.இதனால், அந்த இளம்பெண்மட்டுமின்றி, நாயை பிரிந்ததில்,அவரது குடும்பத்தினரும் கடும் துயரத்திற்கு உள்ளாகினர்.இந்நிலையில் அந்த நாயை இடையன்சாவடியில் உள்ள ஒரு பகுதியில், அந்த இளைஞர்வேறு சில நாய்களுடன் வைத்து, வளர்த்து வந்தார்.நேற்று காலை அப்பகுதியை கண்டறிந்து அங்கு சென்ற இளம் பெண் நாயை, எடுத்து வர முயற்சி செய்தார். இதையடுத்து, அந்த பெண்ணிற்கும் இளைஞருக்கும்இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அதனை தொடர்ந்து, இருவரும் நாய் 'சாரா'வுடன்,கோரிமேடு காவல் நிலையத்திற்கு வந்தனர். போலீசாரோ, நாய் பிரச்னையை இருவரும் பேசி தீர்த்து கொள்ள, அறிவுறுத்தினர்.இதையடுத்து, நாய் 'சாரா'அதன் உரிமையாளரான இளம்பெண்ணிற்கும் சொந்தம்எனவும், அது போடும் குட்டிகளை அந்த இளைஞரிடம் ஒப்படைக்கவேண்டும் எனவும், இருவரும் பேசி சமசரம் செய்து கொண்டனர்.இதையடுத்து, நாய் சாராவை, இளம் பெண் தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.