மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
10 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
10 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
10 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
10 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரியில் குப்பை அள்ளும் டென்டரில் பல கோடி கைமாறி உள்ளதாக, முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார்.அவர் கூறியதாவது;பா.ஜ., 200 இடங்களில் கூட வெற்றி பெறாது. தமிழகம், புதுச்சேரியில் இண்டியா கூட்டணி 40 தொகுதியிலும் வெற்றி பெறும். பா.ஜ., அ.தி.மு.க., படுதோல்வி அடையும்.திருவள்ளுவர் படத்திற்கு, கவர்னர் ரவி காவி சாயம் பூசி, தான் ஒரு சங்கி என நிருபித்துள்ளார். தமிழக மக்கள் மனநிலை புரியாமல், ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தத்தை புகுத்த பார்க்கிறார்.எந்த கட்சியும் சேராதவராக இருக்க வேண்டிய கவர்னர், பா.ஜ., கை கூலியாக இருப்பது வேதனை அளிக்கிறது. இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்து 3 மாதத்தில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தருவோம்.புதுச்சேரி பொறுப்பு கவர்னர் ராதாகிருஷ்ணன், ஏற்கனவே இருந்த கவர்னர்கள் கிரண்பேடி, தமிழிசை போல அரசு நிர்வாகத்தில் தலையிடுகிறார்.கஞ்சா விஷயத்தில் தலையிடுவது வரவேற்க தக்கது. அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்தி முடிவு எடுக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை.குப்பை அள்ளும் டெண்டரில்கோடிக்கணக்கான பணம் கைமாறி உள்ளது.டெண்டர் விடுத்தவர்கள் மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்கா மல், ஒரு டன்னுக்கு ரூ.2 ஆயிரம் பெற்று குறைந்த சம்பளம் வழங்கி கொள்ளை அடிக்கின்றனர்.காரைக்காலில் மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி பயிருக்கு, ஏக்கருக்கு ரூ. 70 ஆயிரம் வழங்க வேண்டும்.புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல், ஆக்கிரமிப்புகள் அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இ.சி.ஆரில் சிவாஜி சிலையில் இருந்து முருகா தியேட்டர் வரை மேம்பாலம் அமைக்க போடப்பட்ட திட்டம்கிடப்பில் கிடக்கிறது. இவ்வாறு அவர், கூறினார்.
மேலும், அவர் கூறுகையில், 'புதுச்சேரி அரசில் உதவியாளர் பணியிடத்தை மாநில அரசு நிரப்ப மத்திய தேர்வாணையம் அனுமதி கொடுத்தது. ஆனால்புதுச்சேரி அரசு அந்த அதிகாரத்தை மத்திய தேர்வாணையத்திற்கே திருப்பி அளித்துள்ளது. உதவியாளர் பணியிடத்திற்கு நேரடி நியமனம் செய்தால்நேரடியாக உதவியாளர் பணிக்கு வருபவர்களின் கீழ், யு.டி.சி. சீனியர்கள் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். நேரடி நியமனம் கூடாது. உதவியாளர் பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் மட்டுமேநிரப்ப வேண்டும்' என்றார்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago