| ADDED : மார் 25, 2024 05:13 AM
வில்லியனுார்: வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலை மையமாக கொண்டு நேற்று மாலை 26வது ஆன்மிக நடைபயணம் சென்றனர்.வில்லியனுாரில் பழமைவாய்ந்த திருக்காமீஸ்வரர் கோவிலில் நேற்று மாலை 6:00 மணிக்கு துவங்கிய பவுர்ணமி ஆன்மிக நடைபயணத்தில் சிவனடியார்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.வில்லியனுார் நான்கு மாட வீதிகள், வீர ஆஞ்சநேயர், மூலக்கடை பாடல் பெற்ற வினாயகர், ராமபரதேசி சித்தர் பீடம், வி.தட்டாஞ்சாவடி தேங்காய்சுவாமி சீத்தர் பீடம், ஒதியம்பட்டு நான்கு ரோடு சந்திப்பு வழியாக சென்று காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் தரிசனம் செய்தனர்.ஆற்று மேம்பாலத்தில் சங்கரா ஆரத்தியுடன், திருக்காஞ்சி கெங்கைகாவராக நதீஸ்வரர் கோவிலில் வழிபாட்டு, உறுவையாறு, கோட்டைமேடு, வழியாக மீண்டும் திருக்காமீஸ்வரர் கோவிலை வந்தடைந்தனர்.