மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
14 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
14 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
15 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
15 hour(s) ago
புதுச்சேரி: தாகூர் அரசு கலை கல்லுாரியில் ஆய்வு செய்த நாக் கமிட்டியினர் 16 துறைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்தனர்.புதுச்சேரி தாகூர் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் மே 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நாக் கமிட்டி ஆய்வு செய்யும் என அறிவிக்கப்பட்டது.இந்த நாக் கமிட்டி குழு இருநாள் ஆய்வு பயணமாக நேற்று தாகூர் அரசு கலை கல்லுாரி வந்தனர். இதில் குஜராத் மாநிலம் பரோடா வதோரா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழக துணைவேந்தர் விஜய்குமார் ஸ்ரீவஸ்தா தலைமையில் , டில்லி பல்கலைக்கழக வணிகவியல் துறை பேராசிரியர் விஜயகுமார் ஷ்ரோத்திரியா, பஞ்சாப் ஜலந்தர் ஹன்சுராஜ் மகிளா மகாங் வித்யாலயா மகா வித்யாலயா முதல்வர் அஜய் சரீன் , பெங்களூரு தேசிய சட்ட பள்ளி துணை ஆலோசகர் பிரசாந்த் பர்ஹாத் ஆகியோர் வந்திருந்தனர். இவர்களுக்கு கல்லுாரி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் சசிகாந்ததாஸ்,கல்லுாரியின் சிறப்புகள் குறித்து காணொலி காட்சி மூலமாக விளக்கின்றனர்.கல்லுாரி உள்தர மேம்பாட்டு குழுவின் ஒருங்கிணைப்பாளர் வேலுராஜ்,கடந்த ஐந்து ஆண்டுகளில் கல்வி வளர்ச்சி,மாணவர்களின் ஈடுபாடு,ஆசிரியர்களின் திறன்மேம்பாடு,அலுவல நடைமுறையில் ஏற்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களை பட்டியலிட்டார்.அதை தொடர்ந்து கல்லுாரியின் 16 துறைகளின் தலைவர்கள்,தங்களது துறைகளின் வளர்ச்சி,மாணவர்களின் வளர்ச்சி,எதிர்கால திட்டங்கள் குறித்து எடுத்துதுரைத்தனர். பின் கல்லுாரியில் உள்ள 16 துறைகளுக்கும் சென்று நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்.அரவிந்தர் பெயரில் அமைந்துள்ள நுாலகத்தையும் பார்வையிட்டனர்.பின் மதிப்பீட்டு குழுவினர் கல்லுாரி மாணவர்கள்,பெற்றோர்களுடன் கலந்துரையாடினர்.கல்லுாரியில் செயல்பட்டு வரும் கற்றல் எழுதுதல் திறன் வளர்ப்பு மையம்,பல் திறன் வளர்ப்பு மையம்,சிவப்பு நாடா சங்கம்,நாட்டு நலப்பணித்திட்டம்,தேசிய மாணவர் படை,விளையாட்டு மைதானம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.சாந்தி ஆரண்யம் திறந்த வெளி கலையரங்கில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.இரண்டாவது நாளாக இன்றும் நாக் கமிட்டி ஆய்வு செய்கிறது.
14 hour(s) ago
14 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago