மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
9 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
9 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
9 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
9 hour(s) ago
கடலுார் : கடலுார் கேப்பர் மலையில், மத்திய சிறை உள்ளது. இங்கு, தண்டனைக் கைதி, விசாரணைக் கைதிகள் என 800க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.நேற்று காலை மத்திய சிறை தலைமை காவலர் அம்பா அப்துல் காதர், அருணகிரி இருவரும் 'லிஷா' மோப்ப நாயுடன் சிறை வளாகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, சிறை பள்ளிக்கு பின்புறம் உள்ள மரத்தின் கீழ், பாலித்தீன் பையில் 20 கிராம் கஞ்சா பொட்டலமாக கட்டி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. பல்வேறு கட்ட பாதுகாப்பையும் மீறி மத்திய சிறை வளாகத்திற்குள் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.கஞ்சாவை பறிமுதல் செய்த சிறைக்காவலர்கள், கடலுார் முதுநகர் போலீசில் ஒப்படைத்தனர்.இதுகுறித்து மத்திய சிறைக்குள் கஞ்சாவை எடுத்து செல்லும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மத்திய சிறை எஸ்.ஐ., செல்வம் கொடுத்த புகாரில், முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago