மேலும் செய்திகள்
அரசு கிளை நுாலகம் திறப்பு விழா
13 hour(s) ago
தேர்தல் நெருங்குவதால் காலியாகும் சட்டசபை
13 hour(s) ago
இறுதிகட்ட பட்டுவாடாவில் அரசியல் கட்சிகள் தீவிரம்
13 hour(s) ago
புதுச்சேரி: தேங்காய்த்திட்டு ராமகிருஷ்ணன் அரசுப் பள்ளியில், 10,ம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.புதுச்சேரி, தேங்காய்த்திட்டை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். புதுவை அரசு இதழின் ஆசிரியர் மற்றும் கவிஞர் பாரதிதாசனின் மூத்த மாணவர். இவர் தேங்காய்த்திட்டில் அரசு பள்ளிக்கு வருவதற்கு முன்பாக, பஜனை மடத்தில் இலவச பாடசாலை நடத்தியவர் என்பதால், இவரது பெயரில், தேங்காய்த்திட்டில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், ராமகிருஷ்ணனின், 117,வது பிறந்தநாளையொட்டி, அப்பள்ளியில், 10,ம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆசிரியர் பூங்குன்றன் வரவேற்றார்.இந்த நிகழ்வில் பாஸ்கர் எம்.எல்.ஏ., முன்னாள் சபாநாயகர் சபாபதி, சிவப்பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பரிசு வழங்கி, பாராட்டினர்.நிறைவாக ஓய்வு பெற்ற உடற்கல்வி விரிவுரையாளர் சித்ரா ஜோதிமணி நன்றி கூறினார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஜோதிமணி மற்றும் ராமகிருஷ்ணனரின் குடும்பத்தினர் மேற்கொண்டனர்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago