உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

புதுச்சேரி: அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருளை விற்றவரை போலீசார் கைது செய்தனர்.பெரியகாலப்பட்டு பகுதியல் உள்ள கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்குள்ள கடைகளில் சோதனை செய்தனர். அப்போது பெரியகாலப்பட்டு கருணாகரன் 53, என்பவரது டீ கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து காலாப்பட்டு போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி