| ADDED : ஜூன் 19, 2024 05:26 AM
புதுச்சேரி : ஊர்காவல்படை வீரர் தேர்வுக்கு நாளை முதல் ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி காவல் துறையில் 420 ஆண், 80 பெண் ஊர்காவல்படை வீரர்கள் தேர்வு ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்பட்டன. ஆண்கள் 15,697 பேரும், பெண்கள் 4492 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு கடந்த பிப்., மாதம் நடந்தது. ஆண்கள் 3034 பேரும், பெண்கள் 1195 பேர் என மொத்தம் 4229 பேர் தகுதி பெற்றனர்.இவர்களுக்கு வரும் 30 ம் தேதி காலை 10:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை எழுத்து தேர்வு நடக்கிறது. இதற்காக புதுச்சேரியில் 12 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இத்தேர்விற்கான ஹால்டிக்கெட் https://recruitment.py.gov.inஎன்ற இணையதளத்தில் நாளை 20ம் தேதி முதல் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.தேர்வர்கள் ஹால்டிக்கெட்டுடன், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசன்ஸ், பாஸ்போர்ட், பான்கார்டு உள்ளிட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை எடுத்து செல்ல வேண்டும். தேர்வு மையத்தின் மெயின் கேட் தேர்வுக்கு 30 நிமிடங்களுக்கு முன் காலை 9:30 மணிக்கு மூடப்படும்.தேர்வு தொடர்பான மேலும் விபரங்களுக்கு, நாளை 20ம் தேதி முதல் 29ம் தேதி வரை, அலுவலக நேரத்தில் 0413-2233338 தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.